| போரைக் கைவிடற்கு வேண்டுவன பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினன். வேந்தன் உடன் பட்டான்; விடிந்தது பொழுது; ஏணியும் சீப்பும் களையப்பட்டன; தானைவீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். அது கண்ட வேளாசானுக்கு அப் பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது. அதனை இப் பாட்டின் கட் பொருளாக வைத்துரைத்துள்ளார். | வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்பபான் எல்லி வந்து நில்லாது புக்குச் கொல்லிய சொல்லோ சிலவே யதற்கே | 5. | ஏணியுஞ் சீப்பு மாற்றி | | மாண்வினை யானையு மணிகளைந் தனவே. |
திணை: வாகை; துறை; பார்ப்பன வாகை. மதுரை வேளாசான் பாடியது.
உரை: வயலைக் கொடியின் வாடிய மருங்குல் - வயலைக் கொடி போல வாடிய இடையினையும்; உயவல் ஊர்தி - வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோலும் நடையினையும்; பயலைப் பார்ப்பான் - இளமையினையு முடைய பார்ப்பான்; எல்லி வந்து நில்லாது புக்கு - இரவின்கண் வந்து நில்லாமல் உள்ளே சென்று; சொல்லிய சொல்லோ சில - சொல்லிய சொற்களோ பலவல்ல சிலவே; அதற்கு - அதன் பயனாக; ஏணியும் சீப்பும் மாற்றி - ஏணியையும் சீப்பையும் நீக்கி; வினைமாண் யானையும் மணி களைந்தன் - போர் பல செய்து மாட்சிமைப்பட்ட யானைகளையும் அவற்றின் பக்கத்தே கட்டப்பட்ட மணிகளையும் நீக்கிவிட்டனர்; எ - று.
வயலைக்கொடி இக்காலத்தே வசலைக்கொடியென வழங்கும். ஊர்ந்து செல்வத ஊர்தி; ஈண்டு நடைக்காயிற்று. இதனைக் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு செல்லுதல் என்பர் பேராசிரியர். சொல்லிய சொல்லோ சிலவே என்றதனால், செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பல வென்பது விளங்கற்று. மதில் கோடற் கேணியும் மதில் வாயிலைக் காத்தற்குச் சீப்பும் கருவிகளாம். சீப்பென்றது, உள்வாயிலில் கதவுக்கு என்பதும், ஏனைப் படை வகைகளும் கலைந்து தத்தம் இடம் சேர்ந்தன என்பதும் பெறப்படும். பார்ப்பான் வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சில; அதற்கு மாற்றிக் களைந்தன எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: இது பார்ப்பன வாகையெனத் துறை வகுக்கப்பட்டுளது; பார்ப்பன வாகையாவது, கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று (பு. வெ. மா. 8 : 9) எனப் படுகின்றது. இது பார்ப்பன முல்லை பெயன்றிருப்பின் சீரிதாம். பார்ப்பன முல்லையாவது: கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கு, நான்மறையோ னலம் பெருகு நடுவுநிலை யுரைத்தன்று (பு . செ. மா. 8:18) என வரும். இதன்கண் பார்ப்பான் |