| வந்து சொல்லிய சொல் சிலவென்றும், போரொழிந்ததென்றம் கூறுவது. இது பார்ப்பனமுல்லையாதலை வற்புறுத்துகின்றது. வினைமாண் யானை யென்றது, போர் வினையில் நன்கு பயின்று மாட்சியுற்ற யானை யென்றவாறு. வினை நவில் யானை, தொழில் நவில் யானை, (பதிற். 82, 84) என்ற சான்றோர் யானையைச் சிறப்புத்தல் காண்க. வயலைக் கொடியின் வாடிய மருங்குல் என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூதுசென்றவாறு உணர்க (தொல். அகத்,26) என்றும் இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறம் கண்டோர் கூறியது (தொல்.புற்த். 12) என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பர்.
306. அள்ளூர் நன்முல்லையார்
நல்லிசைப்புமை மெல்லியலாருள் நன்முல்லையாரும் ஒருவர். இவரது ஊர் அள்ளூர் என்பது. தஞ்சை மாநாட்டிலுள்ள திருவாலங் காட்டிற்கும் அள்ளூரென்பது பெயரென அவ்வூர்க் கல்வெட்டு ( A. R. No. 79 of 1926) கூறுகிறது. திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டொன்றில் ( S.I.I. Vol.V.No.438) அள்ளூர் ஒன்று காணப்படுகிறது. இவரும், கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் (அகம். 46) என்று பாண்டியனைக் குறித்துள்ளார். ஆதலால், இவர் பாண்டிநாட்டு அள்ளூரினரெனத் தெளியலாம். தலைமகனொருவன் கற்புடைய மனையாளொடு இல்லிருந்து நல்லறஞ் செய்து வருகையில் புறத்தொழுக்க முடையனானான். அதனால் அவன் மனையாட்டு வருத்தமுண்டாயிற்று. அவள் உடல்நலம் குறைந்தது; மேனி நலமும் வாடியது. அது கண்ட தோழி அவளது வருத்தம் நீங்கற்கென அவனைக் கொடுமை கூறினாள். தலைமகளோ அது பொறாது, நன்னலம் தொலைய நலமிகச் சாஅய், இன்னுயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு அன்னையும்;அத்தனும் அல்லரோ (குறுந். 93) என்றாளென நன்முல்லையார் பாடுவது அவரது சான்றாண்மையச் சிறப்புறத் காட்டுகின்றது. ஒருகால் நன்முல்லையார் காடு சேர்ந்த நாட்டுக்குச் சென்று ஒரு மறக்குடி மகளைக் கண்டார். அவள் தன் குடியின் முன்னோர் புகழ் நிலவப் பொருது நடுகல்லாகியது அறிந்து அவர் நடுகல்லை நாடோறும் தவறாமல் வழிபட்டு வந்தாள். அவ் வழிபாட்டில், அவள், தான் நாளும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும் என்றும், தன் கொழுநன் போரில் வென்றிபெறுக வென்றும், போர் செய்யும் பகை வேந்தரும் உண்டாக வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டாள். அவள் செயல்மாண்பு கண்டு வியப்புற்ற நன்முல்லையார் இப் பாட்டினைப் பாடியுள்ளார். | களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி அரிதுண் கூவ லங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்த லொண்ணுத லரிவை நடுகற் கைதொழுது பரவு மொடியது | 5. | விருந்தெதிர் பெறுகதில் யானே யென்னையும் | | ஓ...வேந்தனொடு நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே. |
திணை: அது,துறை: முதின்முல்லை. அள்ளூர் நன்முல்லையார் பாடியது. |