| இக்களியாளனைப் பெருங்கனியாளன் என்றதற்கேற்ப, அவனது பெருமைக் குரிய கொடைநலத்தை எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து என்றார். பொருள் பெற்று மகிழும பாணன் ஏனைப் பாணர்க்குக் கூறியது.
விளக்கம்: தஞ்சைமாநாட்டில் உள்ள திருமங்கலக்குடிக்கருகே வேம்பற்றூரென ஊர் ஒன்றும் உளதெனக் கல்வெட்டு ( A. R. No 224 of 1927) கூறுகிறது; களிமயக்கால், கிடத்தற்கெனச் சிறிது இடம் கிடைத்தாற் போதுமென வருவார்க்குத், துப்புரவில்லாத முன்றில் கிடைக்கின், அதனைத் தூய்மை செய்து பாய் பரப்பி அதன்மேற் கிடத்தற்கு நினைவோடாதாகலின், அதனை அவன் தகுதி கண்டோர் தாமே செய்யும் கடப்பாட்டின ராவதுபற்றி, வந்து முன்றிற்கிடந்தபெருங்கனி யானற்கு அதளுண்டாயினும் பாயுண்டாயினும் யாதுண்டாயினும் வல்லே கொடுமின் என்றனர். இரவலரை நன்கு உண்பித்து இனிது துயிலப்பணணுந் தலைவற்கு அவர் தம்பால் உள்ளன நல்கி இனிது துயில்வித்தல் முறையாதலின், யாதுண்டாயினும் வல்லே கொடுமின் என்றாரென வறிக. இப் பாட்டிடையே அடிகள் சிதைந்தமையின், பாட்டின் பொருள் நலம் இனிது காண்டற்கியலாதவாறு கிடக்கின்றது. 318. பெருங்குன்றூர்கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூராயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் அவனால் விடப்பெற்றவர் பெருங்குன்றுர்கிழார். வையாவிக்கோப்பெரும்பேகனைப் பாடி அவன் மனைவி கண்ணகியோடு கூடி வாழுமாறு அவன் உள்ளத்தைத் திருத்தியவருள் இவரும் ஒருவர். தம்பால் அறிவு கெட நின்ற நல்கூர்மையை ஒழிப்பது குறித்துச் சோழள் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பெரும் பரிசில் பெற்றவர், இத்தகைய சான்றோர் ஒருகால் பெரும் போருடற்றி வெற்றிக்கொண்டு வாகைசூடி மேம்பட்ட தலைவனொகுவனைக் கண்டார். அவன்தன் வேந்தன் பொருட்டுக் கடும்போர் புரிந்தான். அவ் வேந்தன் போரில் துன்புற்றிருப்பானாயின், தலைவனாகிய இப் பெருந்தகையின் ஊர் பசியால் பெருந்துயர் உழக்கும் என்று இப் பாட்டின்கட் குறித் துரைத்து மகிழ்கின்றார். | கொய்யடகு வாடத் தருவிற் குணங்க மயிலஞ் சாயன் மாஅ யோளொடு பசித்தன் றம்ம பெருந்தகை யூரே மனையுறை குரீஇக் கறையணற் சேவல் | 5. | பாணர் நரம்பின் சுகிரொடு வயமான் | | குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப் பெருஞ்செய் நெல்லி னரீசி யார்ந்துதன் புன்புறப் பெடையொடு வதியும் யாணர்த் தாகும் வேந்துவிழு முறினே |
திணையும் துறையு மவை. பெருங்குன்றூர்கிழார் பாடியது. |