| உரை:கொய்யடகு வாட - கொய்யப்பட்ட இலைக்கறி வாடி வதங்கவும்; விறகு உணங்க - கொண்டுவந்த விறகு உலர்ந்து கெடவும்; மயிலஞ் சாயல் மாயோளொடு - மயில் போன்ற சாயலும் மாமை நிறமுமுடைய மனையானோ கூடி வாழும்; பெருந்தகையூர் - பெரிய தகைமையினையுடைய தவைவனதூர்; வேந்து விழு முறின் - வேந்தன் போரில் துன்புறுவானாயின்; பசித்தன்று - பசியால் வருந்தும்; மனையுறை குரீஇக் கறை யணல் சேவல் - மனையிறைப்பில் வாழும் ஊர்க்குருவியின் கரிய கழுத்தைமயுடைய ஆண்; பாணர் நரம்பின் சுகிரொடு - பாணருடைய யாழ் நரம்பின் கோதுகளுடன்; வயமான் குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை - வலிமிக்க சிங்கத்தின் கதிர்த்த பீலிபோன்ற மயிரைக்கொண்டு செய்த கூட்டின்கண்; பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து - பெரிய வயலிடத்து விளைந்த நெல்லரிசியை யுண்டு; தன் புன் புறப் பெடையொடு வதியும் - தனது புல்லிய புறத்தையுடைய பெண்ணோடு தங்கும்; யாணர்த்தாகும் - புதுவருவாயினையுடையதாம்; எ - று.
வேந்து விழுமுறின், ஊர் பசித்தன்று; யாணர்த்தாகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேவர் அரிசியார்ந்த பெடையொடு குடம்பைக்கண் வதியும் யணர்த்தாம் என இயையும். பசித்தல் தெளிவாகலின், இறந்த காலத்தாற் கூறினார். வேந்தன் விழுமமுறாதவாறு பகைவரொடு பொருது வென்றி கண்டானாதலின் பெருந்தனை யென்றார். குருவியில் ஆண் கருத்த கழுத்தையுடையதாகலின், கறையணல் என்றார். நரம்பைச் சீவிச் செம்மை செய்யுங்களால் நீக்கப்படும் நார் போன்ற கோது, சுகிர் எனப்பட்டது. முதிர்ந்த மயிர் கதிர் விட்டுத் துய்போற் கவைத்து நிற்றலின், அதனைக் குரல் செய் பீலி யெனவும், நெல்லைப்பொறுக்கி உமியை நீ்க்கி அரிசியையே தின்றலின், நெல்லின் அரிசி யார்ந்து எனவும் கூறினார்.
விளக்கம்: சோற்றிற்கு வேண்டும் அரிசியின்றி அடகும் விறகும் பெற்ப்படுமாயின், அவை உணவுக்காகாமையின், பயப்பாடின்றி வீணாமென்பார், கொய்யடகு வாட வெனவும், தருவிறகுணங்க வெனவும் வகுத்தோதினார். மாலை நிறமும் மயில்போலும் சாயலு முடையாள் பசியால் மேனி மெலிந்து நிறங் கரிந்து சாயலுடைந்து கெடுவது ஒருதலை. வேந்தன் விழுமமுறுவானாயின் பெருந்தகையது ஊர் பசித்துக் கெடும் என்றவர், அவ்வூரின் நலம் கூறுவாராய்க் என்றார். விழுமுறின் எனவே, உறாமை பெற்பட்டது. மனையுறை குருவியின் ஆண் கழுத்திற் கறையுடையதாதல் கண்கூடு. இதனை விதந்து சான்றோரும் உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல் (நற். 181) என்பார். பெருஞ் செய் நெல் லென்றவிடத்துப் பெருமை நெல்லிற்குரியது; அஃது இடத்தின்மேல் நின்றது. செய், வயல், பெடைசாம்பல் நிறத்ததாகலின், அதனைப் புன்புறப் பெடை’ யென்றார்; பிறரும் ஆம்பற்பூவின் சாம்பலன்ன, கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ (குறுந். 46) என்பர். மனையுறை அணிமையில் நெல் விளையும் வயலுள்ள வளவிய ஊராதல் பெறப்படும் பெருந்தகையூர் |