பக்கம் எண் :

232

     

என்றதற்குப் பெரியதகைமையினை யுடைய  வூரென  வுரைப்பினுமமையும்.
வேந்து விழுமமுறின். யாணர்த்தாகும்  பெருந்தகையூர்  பசித்தன்று எனச்
சொல்லி விழுமம் உறா வகையில் மறவர் பொருது காத்தவாறு

319. ஆலங்குடி வங்கனார்

     ஆலங்குடி யென்னும் ஊர்கள் பல தமிழ் நாட்டில் உள்ளன. இவ்
வங்கனார் சோழருடைய உறையூரையும், அவ்வூரிலுள்ள அறங்கூறவை
யத்தையும் “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறங்கெட அறியாது”
(நற். 400) எனச் சிறப்பித்துக் கூறலின், இவர் சோழ நாட்டவர் எனத் துணிந்து
கூறலாம் பரத்தையிற் பிரிந்து புறத்தொழுகும் தலைமகனுக்குத்  தோழி,
“பரத்தையர் புன்மனமுடையவர்;  அவரை  நின் மனைக்கண் வைத்துப்
பேணுவாயாயினும் அவர் “பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி
சான்ற கற்போடு, எம்பாடாதல் அரிது” எனத் தெருட்டுவது மிக்க இன்பந்
தருவதொன்று.  ஒரு  தலைவன் தன்வேந்தன் பொருட்டுப்  போர்க்குச்
சென்றிருந்தான். அவன் மனையவள் தன் மனைக்கண் இருந்து தனக்குரிய
அறத்தைச் செய்து வந்தாள். அக்காலை அவன் அருள் பெற்று மாலைப்
பொழுதாயிற்று; அவன் கருத்தையறிந்த மனைக்கிழத்தி, “பாண, பொழுது
மறைந்தது. யாம் என்பாலுள்ளது முயற்கறியே யாயினும் தருகுவேம்; உண்டு
இங்கேயிருந்து செல்க; நேற்று வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றுள்ள
தலைவன் நானை வாகை குடிப் பெரும் பொருளுடனே வந்துவிடுவன். நின்
பாடினி பொன்னரி மாலையணிய நீ பொற்றாமரை சூடத்தருவன்” என்றாள்.
அதனைக் கேள்வியுற்றார் ஆசிரியர்  ஆலங்குடி  வங்கனார்.  மறக்குடி
மகளாகிய அவள் கூற்றில் தன் காதலனைப்பற்றிய நினைவிடைக் கலக்கம்
சிறிதுமில்லாமலிருந்தது அவருக்கு மிக்க வியப்பினைத் தந்தது. அதனை
இப்பாட்டின்கண் வைத்து இனிமை மிகப்பாடியுள்ளார்.

 பூவற் படுவிற் கூவற் றொடீஇய
செங்கட் சின்னீர் பெய்த சீறில்
முன்றி விருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃ டுண்டென வறிது மாசின்று
 5.படலை முன்றிற் சிறுதினை யுணங்கல்
 புறவு மிதலு மறவு முண்கெனப்
முயல்சுட்ட வாயினுந் தருகுவேம் புகுதந்
தீங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண
 10.கொடுங்கோட் டாமா னடுங்குதலைக் குழவி
 புன்றலைச் சிறாஅர் கன்றென்ப் பூட்டும்
சீறூர் மன்ன னெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலை யணிய
 15. வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே.

     திணையும் துறையு மவை. ஆலங்குடி வங்கனார் பாடியது.