பக்கம் எண் :

29

     
 முலைக்கோண் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே.

   திணையும் துறையு மவை. அவனையவர் பாடியது.

    உரை: அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு - அஞ்சத் தக்க
முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு
அணங்குடை யரவின் அருந்தலை துமிய - அச்சமுடைய பாம்பினது
அணுகுதற்கரிய தலை துணிய; நின்று காண்பன்னை நீள்மலை மிளிர -
நிலவகலத்தை நின்று பார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழ;குன்று தூவெறியும்
அரவம்போல - சிறுமலை தூவஎறியும் ஒசைபோல; முரசு எழுந்து இரங்கும்
தானையொடு தலைச்சென்று - வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே
மேற்சென்று;அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் - வேந்தர்பட எதிர்
நின்று கொல்லும் புகழமைந்த தலைவ; வள்ளியை யாதலின் - நீ வள்ளியை
யாதலான்; வணங்குவன் இவன் என - எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன்
இவன் என்று; நின் உள்ளி வந்த- நின்னை நினைந்து வந்த; ஓங்கு நிலைப்
பரிசிலென்- உயர்ந்த நிலைமையயுடைய பரிசிலேனாகிய யான்; கொள்ளா
மாந்தர் கொடுமை கூற -நினக்கு எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தரது
கொடுமையைச் சொல்லவும்;நின் உள்ளியது முடித்தோய் மன்ற-நின்னுடைய
நினைவே செய்தாய் நிச்சயமாக; முன்னாள் கையுள்ளது போல் காட்டி -
முன்னைநாள் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டி; வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் - பிற்றைநாள் பொய்யைப் பெற்று
நின்ற நினது புறநிலைமைக்குயான் வருந்திய வருத்தத்திற்கு;நாணாயாயினும்
- நீ தான் நாணாய் ஆயினும்; நாணக் கூறி - நீ நாணச்சொல்லி; என்
நுணங்கு செந்நா-எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா;
அணங்க ஏத்தி வருந்தப் புகழ்ந்து;பாடப்பாடப் பாடுபுகழ் கொண்ட
-நாடோறும் பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை
யேற்றுக்கொண்ட;நின் ஆடு கொள் வியன் மார்பு - நினது வென்றி
பொருந்திய அகன்ற மார்பை;தொழுதனென் பழிச்சிச் செல்வல் யான்
- வணங்கி வாழ்த்திப் போவேன் யான், வைகலும் வல்சி
இன்மையின் - நாடோறும் உணவில்லாமை யான்; வயின் வயின் மாறி -
இடந்தோறம் இடந்தோறும் மாறி மாறி அகழ்தலால்;இல்லெலி மடிந்த தொல்
சுவர் வரைப்பின் - இல்லெலி மடிந்த பழைய சுவராகிய எல்லையையுடைய;
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து - பாலில்லாமையாற் பலபடி
சுவைத்து; முலைக்கோள் மறந்தபுதல்வனொடு - முலையுண்டலை வெறுத்த
பிள்ளையுடனே; மனைத்தொலைந்திருந்த - மனையின் கண்ணே