பக்கம் எண் :

292

     

முறையே காவும், தெருவும், வழியும், துறையும் கலங்கிப் பொலிவழிந்தன;
மகள் வேண்டி வரும்போதே இவ்வூர்த் தெருவும் பிறவும் இன்ன கலக்க
மெய்துமாயின், இவர்கள் போர்குநித்து வரின், இம் மகளுடைய தந்தை
தன்னையாரின் களிறும் மாவும் தேரும் மறவர் தொகையும் உடன் கலந்து
இயங்குமாதலால் இவ்வூரது நிலை சொல்லற்கரிய கலக்கமெய்து மென்பது
தெளிய விளங்குவது கண்டு, “என்னாவது கொல்” என்றும், இவளுடைய
தன்னையர்   பலகையரும்   வாளரும்  தலையருமாதலால்,   இவ்வூர்
கலக்கமெய்தாவாறு காக்கப்படுமன்றோ  வெனின்  காக்கப்படுமென்பது
தெளிவேயெனினும், அதனையும் பொருதே செய்யவேண்டியிருத்தலின்,
“இன்ன மறவர்த் தாயினும்” என்றும் கூறினார். இதனையும் விலக்கலா
மெனினும், தன்னையர் மகட்கொடை வேண்டி வந்த வேந்தர் நிரல்
நன்குடையரல்லரென்றும், அவர் தரும் ெ்சல்வத்தைப் பெற்றுத் தம்முடன்
ஒப்பக் கோடற் கொருப்படுகின்றிலரென்றும் விளக்குவாராய், “நிரல்
அல்லோர்க்குத் தரலோ வில்லெனச் செல்வம் வேண்டார், செருப்புகல்
வேண்டின” ரென்றார். நிரல் என்பதன் இயல்பை, “இளமையும் வனப்பும்
இல்லொடு வரவும், வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும், தேசத்தமைதியு
மாசில் சூழ்ச்சியோ, டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது, மகட்கொடை
நேரார் மதியோர்” (பெரங். 1:26:89-93) என்று பிறரும் கூறுவதனால்
அறிந்துகொள்க. மகட்பாற் காஞ்சிக்கு இதனைக் காட்டி, “நிரலல்லோர்க்குத்
தரலோ வில்லென வென்றலின், அரவர்க்கு மகட்கொடைக்குரியரல்லாத
அனைநிலை வகையோர்பாற் பட்ட” தென்பர் நச்சினார்க்கினியர்; (தொல்,
புறத். 24),

346. அண்டர் மகன் குறுவழுதியார்

     இக் குறுவழுதியார் அண்டர் நடுங்கல்லினார்க்கு மகனார்போலும்.
பாண்டிவேந்தர்க்கீழ்   விளங்கிய   தானைத்தலைவர்களும் ஏனைத்
தலைவர்களும் பாண்டிவேந்தர் சிறப்புப் பெயர்களுட் சிவவற்றைத் தாமுமி
கொண்டிருந்தனர். இதனை இடைக்காலச் சோழ பாண்டியர்களின்
கல்வெட்டுக்களிற் காணலாம். சடையவன்மன் சுந்தரபாண்டியன் காலத்துக்
கல்வெட்டொன்று. (P. S. No. 492) ஒரு தலைவன் பெயரைச் சுந்தரபாண்டிய
வாணாதிராயர் என்று குறிப்பது காணலாம். ஆதலால், இருவரும் குறுவழுதி
யென்ற பெயருடையராயினாரெனக் கருதலாம். பாண்டியர்க்குப் பெருவழுதி
யென்ற பெயருண்டு; சிறு வழுதி யென்றலினும் குறுவழுதி யென்பது
சிறப்புடையதாதலின் இவர் குறுவழுதி யெனப்பட்டனர். இவர் பாடியனவாக
அகத்தில் இரண்டு பாட்டுக்களும் குறுந்தொகையில் ஒரு பாட்டும்
காணப்படுகின்றன. கருப்பொருள்களில் நெய்தலையும் உரிப் பொருளிற்
குறிஞ்சியையும் இவர் பெரிதும் விரும்பிப் பாடுவர். இவர் மறக்குடி யொன்றில்
தோன்றி மனச்செவ்வி யெய்திய மகளொருத்தியை நயந்து பலர் மகட்கொடை
வேண்டி நின்றதும், அவளுடைய தந்தையும் தன்னையரும் மறுத்ததும் கண்டு.
போர் நிகழ்தல் ஒருதலை யென்றும், அதனால் அவ்வூர் பெரும்பாழாம்
என்றும் நினைந்து இப் பாட்டால் வருந்திக் கூறுகின்றார்.

 பிறங்கிலை யினியுள பாலென் மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டா ளல்லள்
கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅன்