| | ஒவ்வே னல்ல னதுவா யாகுதல் | 5. | அழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற் | | பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே. |
திணையும் துறையு மவை. அண்டர்மகன் குறுவழுதியார் பாடியது.
உரை: பிறங்கிலை இனி உளபால் என மடுத்தலின் - பசி தீரு மளவறியும் அறிவால் நீ முதிர்ந்தாயில்லை இனியும் சிறிது பாலுளது உண்க என - வள்ளத்தை வாயில்வைத்து உண்பித்தலால்; ஈன்ற தாய் வேண்டாள் அல்லள் - இவளை மீன்ற தாயும் இதனை விரும்பாதாளல்லள்; வல்லாண் சிறாஅன் கல்வியென் என்னும்-வல்லாண்மைமயுடைய இளையனாகிய இவள் தமையன் சிறிது கல்வியறிவுடையேன் என்று சொல்ாநின்றான்; ஒள் வேல் நல்லன் - ஒள்ளி வேலேந்திப் பொருதலில் நல்ல வீறுடையன் இவட்குத் தந்தை; அழிந்தோர் அழிய - பகைவரொடு பொருது கெட்டோர் ஒழிய; ஒழிந்தோர் ஒக்கல் - கெடாது மேம்படுவோர்க்கு உரிய சுற்றமாய்த் தலையளிசெய்வன்; இவள் நலன் - இவளது நலமோ எனின்; பேணுநர்ப் பெறாது விளியும் - விரும்புவோர் இல்லாது கெடும்; புன்றலைப் பெரும்பாழ் செய்யும் - புல்லிய இடமாகிய பெரிய பாழிடமாக இவ்வூரைச் செய்யும்; அது ஆகுதல் வாய் - அஃது உண்மையாதல் ஒருதலை; எ - று.
நீ உண்டற்குரிய பாலின் அளவை அறியும் அறிவு நிரம்பினாயில்லை; இன்னும் சிறிது பால் உளது; இதனை உண்க. எனப் பரிந்துண்பித்தலால், ஈன்ற தாய்க்கும் இவள்பால் பேரண்பு உண்டு என வற்புறுத்தி யவாறு. பெருங்கல்வியுடையார்க்கல்லது யானும் சிறிது கல்வியுடையே னென்னும் பணிந்த மொழி பகரும் பண்பு உண்டாகாதாகலின், இவள் தமையனும் இவள்பால் மிக்க அன்பு செய்பவனாதல் விளங்குகிறது. இவ்வாறு தாயும் தமையனும் அவர் வாயிலாக ஊரவரும் தன்பால் பேரன்புடைவராகவும், இவளது நலம் இவரனைவரும் கெட ஊர் பாழ்பாடச் செய்வதாயிற்றென இரங்குவது தோன்ற, பேணுநர்ப் பெறாது விளியும், புன்றலைப் பெரும்பாழ் செய்யும் இவள் நலன் என்றும், இஃது ஒருதலை காண்க. என்பார், அதுவாயாகுதல் என்றும் கூறினார். இவள் நலம் பெரும்பாழ் செய்யும்; அஃதொருதலை அதனைப் பின்னர்க் கண்டுகொள்க என்பது குறிப்பெச்சம். சிறா அனென்றது, தமையன் மேனின்றது.
விளக்கம்: சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது போலச் சிறிதள விற்றாகிய பால் சிலவெனப்படுவதுபற்றி உளபால் எனப் பன்மைவினை கூறப்பட்டது. ஈன்ற தாயது அன்பும், சிறாஅன் எனவே தந்தையாயிற்று. இனி, தாயையும் உடன்பிறந்தானையும் கூறலின். தந்தை முன்பே இறந்தொழிந்தானென்னும், வல்லாண் சிறான், ஒழிந்த தாய்க்கும் உடன் பிறந்தார் சுற்றத்தார் முதலியோர்க்கும் ஒக்கலாய் நின்ற பேணுகின்றா னென்றும் உரைப்பினுமமையும். ஒவ்வானல்லன் அதுவாயாகுதல் என்று |