| வடித்த கள்ளையருந்தும் மனனக்கோழி; பைம்பயிரின் - மனையிடத்துக் கோழிசெய்யும் பசிய அழைப்பினால்; கானக்கோழி கவர்குரலோடு - காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை யெடுத்தும்;நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து - நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலையெடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்; வேயன்ன மென்றோள் - மூங்கில் போலும் தோளையும், மயிலன்ன மென்சாயலார் கிளிகடியின் - மயில் போன்ற மெல்லிய சாயலையுமுடையமகளிர் புனத்திற் படியும் கிளிகளை யோப்புவாராயின்; அகல் அள்ளல் புள் இரீ இயுந்து - அகன்ற சேற்றிடத்தே நின்ற புள்ளினங்கள் அவ்விடத்துநின்றும் நீங்கியோடும்; பலநல்ல புலனணியும் - பலவாகிய நல்ல விளைபுலங்கள் சூழ்ந்திருக்கும்; சீர்சான்ற விழுச் சிறப்பின் - தலை மையமைந்த செல்வச் சிறப்பும்; சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் - சிறிய கண்ணையுடைய யானைகளுமுடைய பெறுதற் கரிய தித்தன் என்பானுடைய; செல்லா நல்லிசை உறந்தைக் குணாது - கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே; நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்-நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள; அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் - அறத்தாலுண்டாகிய புகழையுடைய சாத்துனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநராவோம்; பெரும-; முன்னாள் நண்பகல் சுரன்உழந்து வருந்தி - முன்னாள் நண்பகலில் காட்டிடத்தே நடந்து வருந்தி, கதிர்நனி சென்ற களையிருள் மாலை - ஞாயிற்றின் செங்கதிர் மிகக்கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலைப்போதில்; தன் கடைத்தோன்றி என் உறவு இசைத்தலின் - தன்னுடைய மனைமுன்றிலில் நின்று யான் வந்துற்றிருத்தலை - தன்னுடைய மனைமுன்றிலில் நின்று யான் வந்துற்றிருத்தலை அறிவிக்குமாற்றால்; தீங்குரல் - தீவிய இசையாகிய குரலையுடைய;...............; அரிக்குரல் தடாரியொடு - அரித்த ஓசையையுடைய தடாரியுடனே; ஆங்கு நின்ற என் கண்டு - அவ்விடத்தே நின்ற என்னைக் கண்டு; சிறிதும் நில்லன் - சிறிது போதேனும் நின்று தாழ்த்த லின்றி; பெரிதும் கூறான் - மிகுதியாகப் பேசுதலுமின்றி; அருங்கலம் வர வருளினன் - அரிய கலன்களை நல்கி வரவிடுவானாய்; வேண்டி - மிகவும் விரும்பி; ஐயெனவுரைத்து அன்றி - மெல்லிய சில சொற்களைச் சொன்னதுமன்றி; நல்கி - எம்பால் பேரருளுடையனாய்; தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி - தன் மனைக்கண்ணுள்ள திருமகள் போலும் மடந்தையாகிய மனையாட்கு என்னைக் காட்டி; இவனை என் போல் போற்று என்றோன் - இவனையும் என்னைப் பேணுவது போல் நல்லுணவு தந்து பேணுக என்று சொன்னான்; அதற்கொண்டு - அதனால்; அவன் மறவலேன் - அவனை மறவேனாயினேன்; பிறர் உள்ளலேன் - அவனை நினைத்த நெஞ்சத்தால் பிறரை நினைப்பதில்லே னாயினேன்; அகன் ஞாலம் பெரிது வெம்பினும் - அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று |