பக்கம் எண் :

449

     

தரையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை
மதுரைக்காஞ்சி பாடிச் சிறப்பித்தவரும், அவனால், “ஒங்கிய சிறப்பின் உயர்ந்த
கேள்வி, மாங்குடி மருதன்” (புறம். 72) எனச் சிறப்பிக்கப்பெற்றவரு மாகிய
மாங்குடிகிழார் மருதனார் ஒருகால் வாட்டாற்று எழினியாதனைக் கண்டார்.
அவன் அவர்கள் வேண்டும் வளம் பலவும் நல்கினான். அதனால்
மாங்குடிகிழார்க்கு உண்டாகிய உவகைக்கு அளவில்லை. அவர், அவன்
நாட்டின் இயல்பையும் அவன் தந்த வளத்தையும் அவனுடைய சிறப்பையும்
குறித்து இப்பாட்டைப் பாடினார். இதன்கண், உள்ளம் இழந்தோர்க்கு உரம்
படைத்த துணைவனாதலும், சீரிய நண்பரை யில்லார்க்குச் சீர்த்த
நண்பனாதலும் வாட்டாற்று எழினியாதன் செயற் பண்பென்றும். அவன்
நல்லிசை தாரசை நடுவண் தண்மதிபோல் விளங்குகவென்றும். புலவர் பாடும்
புகழ்படைத்த அவன் பெருவளம் பெருகுவதாக வென்றும் கிணைப்
பொருநன்
ஒருவன் கூற்றில் வைத்துச் சிறப்பிக்கின்றார்.

 கீழ்நீரான் மீன்வழங்குந்து
மீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
 5.நெடுநீர்தொகூஉ மணற்றண்கான்
 மென்பறையாற் மனைக்கோசர்
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேற னறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
 10. உள்ளிலோர்க்கு வலியாகுவன்
 கேளிலோர்க்கு கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற் றெழினி யாதன்
கிணையேம் பெரும
 15.கொழுந்தடிய சூடென்கோ
 வளநனையின் மட்டென்கோ
குறுமுயலி னிணம்பெய்தந்த
நறுநெய்ய சோறென்கோ
திறந்துமறந்த கூட்டுமுதல்
 20. முகந்துகொள்ளு முணவென்கோ
 அன்னவை பலபல.................
................வருந்திய
இரும்பே ரொக்க லருந்தெஞ்சிய
அளித்துவப்ப வீத்தோ னெந்தை