பக்கம் எண் :

450

     
 25.எம்மோ ராக்கக் கங்குண்டே
 மாரிவானத்து மீனாப்பண்
விரிகதிர வெண்டிங்களின்
விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
 30.நிரைசா னன்கல னல்கி
 உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே.

     திணையுந் துறையு மவை. வாட்டாற் றெழினியாதனை மாங்குடி கிழார்
பாடியது.


     உரை: கிழ்நீரால் மீன் வழங்குந்து - நீரின் கீழே மீன்கள் சென்றுலவும்; மீ
நீரால் கண்ணன்ன மலர் பூக்குந்து - நீரின் மேற்பரப்பில் குவளையுந்
தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலீர்ந்திருக்கும்; கழி சுற்றிய
விளைகழனி - கழிகளாற் சூழப்பட்ட நெல் விளைந்து கிடக்கும் வயலின்கண்;
அரிப்பறையால் புள்ளோப்புந்து - அரித்த ஒசையையுடைய பறையை
முழக்குவதால் கதிர் கவர வரும் கிளி முதலிய புள்ளினங்கள்
வெருட்டியோட்டப்படும்; நெடுநீர் தொகூஉம் மணல் தண்கால் - நீர்மிக்க
கடற்கரைக்கண் குவியும் மணலை யள்ளித் தூவும் குளிர் காற்றினால்;
மென்பறையால் புள் இரியுந்து - மெல்லிய சிறகுகளோடு கூடிய புள்ளினங்கள்
நீங்கிச் செல்லும்; நனைக் கள்ளின் மனைக் கோசர் - மலர்களிடத்திற் பெற்ற
கள் நிறைந்த மனைகளையுடைய கோச ரென்பார்; தீந்தேறல் நறவு மகிழ்ந்து -
தீவிய கட்டெளிவை யுண்டு களி்ப்பேறி; தீங்குரவைத் கொளைத் தாங்குந்து -
இனிய குரவையாடுமிடத் தெழும் பாட்டுக்கள் இசைக்கப்படும்; நீர்வள
வாட்டாற்று எழினியாதன் - நீர்வளஞ் சிறந்த வாட்டாறென்னும் ஊக்கம்
இல்லாதார்க்கு வலியாகித் துணைசெய்வன்; கேளிலோர்க்குக் கேளாகுவன் -
அறிவு வழங்கும் கேளிரை யில்லாதார்க்குக் கேண்மையுற்று அறிவுத் துணை
செய்வன்; கழுமிய வென்வேல் வேள் - பிற படையொடு கலந்த வெல்லும்
வேற்படையையுடைய வேளிர் தலைவனாவன்; கிணையேம் - யாம் அவனுடைய
கிணைப்பொருநராவோம்; பெரும - பெருமானே; கொழுந்தடிய சூடு என்கோ -
அவன் எமக் களித்த கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சியைச்
சொல்வேனோ; குறுமுயலின் நிணம் பெய்தந்த - குறுமுயலின் தசை விரவித்
தந்த, நறுசெய்ய சோறு என்கோ - நறிய நெய்யையுடைய சோற்றைச்
சொல்வேனோ; திறந்து