| மறந்து கூட்டு முதல் - திறந்து பின் மூடுதற்க மறந்தொழிந்த நெற்கரிசையிடத்து; முகந்துகொள்ளும் உணவென்கோ - தாந்தாம் வேண்டுமளவும் முகந்துகொள்ளப்படும் உணவுப்பொருளைச் சொல்வேனோ: அன்னவை பலபல - அவை போல்வன மிகப்பல; ..........வருந்திய............. வறுமையுற்று வருந்திய; இரும்பேரொக்கல் - என் பெரிய சுற்றத்தார்; அருந்து எஞ்சிய - உண்டு கழிந்தவற்றை; உவப்ப அளித்து ஈத்தோன் - உவக்கு மாறு தலையளித்து மீளமீளக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; எம்மோர் ஆக்கம் கங்கு உண்டே - எம்மனோராகிய இரவவர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லையில்லையாம்; மாரி வானத்து மீன் நாப்பண் - மழைமுகில் நிலவும் விசும்பின்கண் தோன்றும் விண்மீன்களிடையே திகழும்; விரிகதிர வெண்டிங்களின் - விரிந்த கதிர்களையுடைய வெள்ளிய திங்களைப்போல; விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை - விளக்கமாய் யாவருமறிய நிலவுவதாக அவனுடைய கெடாத நல்ல புகழ்; நாளும் யாமும் பிறரும் வாழ்த்த - நாடோறும் யாங்களும் எம்போற் பிறரும் வாழ்த்திப் பாராட்ட; நிரைசால் நன்கலம் நல்கி - களிற்றுநிரைகளோடு அமைந்த நல்ல கலன்களை வழங்கி; உரை செலச் சிறக்க - புகழுண்டாக மேம்படுக; அவன் பாடல் சால்வளன் - அவனது புலவர் பாடும் பாடமைந்த செல்வம்; எ - று.
நீர்க்கீழென்பது கீழ்ந்ரென வந்தது. குவளையுந் தாமரையும் மகளிர் கண்ணுக்கு ஒப்பாவனவாதலின் அவற்றைக் கண்ணன்னமல ரென்றொழிந்தார். வயல்களில் வேண்டாது மிகும் நீர் கழிதற்கெடுத்த கழிகால் ஈண்டுக் கழியெனப்பட்டது. புள்ளெனப் பொதுப்படக் கூறினாராயினும் சார்புபற்றிக் கிளி முதலியன கொள்ளப்பட்டன. நெடிய நீரையுடைய கடல் நெடுநீராயிற்று. கடற்கரைக்கண் அலைகளாற் றொகுக்கப்படும் மணல் பரந்த கானலில் தண்ணிய கடற்காற்று மோதித் தூவும் நுண்மணற் கஞ்சிக் கானற்சோலைகளிலும் உப்பங்கழிகளிலும் தங்கும்நாரை முதலிய புள்ளிமை் நீங்கிப் போதலின், நெடுநீர் தொகூஉ மணற் றண்கால். மென்பறையாற் புள்ளிரியுந்து என்றார். காற்றுத்தூவும் மணல்மிக்க நொய்ம்மைத்தாயினும் மெல்லிய சிறகுகளையுடைய நீர்ப்பறவைகள் அதற்காற்றாவாயின என்பதற்கு மென்பறையாற் புள்ளிரியும் என்று சிறப்பித்தார். கோசர்கள்ளுண்பவராதலின், அவரை. நனைக்கள்ளின் மனைக்கோச ரென்றும். அவர்கள் கள்ளுண்டு களித்துக் குரவைக் கூத்தாடும் கொள்கையினராதலின், நறவுமகி்ழ்ந்து தீங்குரவைக் கொளைததாங்குந்து என்றும் கூறினார். உள்ளம் உள்ளென வந்தது. உள்ள மின்மைக்கேது வலியின்மையாதலால், உள்ளிலோர்க்கு வலியாகுவன் என்றார். கேளாந்தன்மை, வழங்கும் அறிவுரைமேற்றர்தலின், அறிவு வழங்குந்திறத்தைக் கேளாகுவன் என்றார். இக்கருத்து, படைவேண்டுவழி வாளுதவியும், வினைவேண்டுவழி அறிவுதவியும் (புறம். 179) என்புழியும் அமைந்திருத்தல் காண்க. என்கோ என்பதை அசைநிலையாகக் கோடலுமொன்று. ஆர்ந்தென்பது அருந்தென வந்தது: வேண்டுவோர் வேண்டியாங்கு முகந்து கொள்ளுமாறு திறந்தகரிசை மூடப்படாமலே யிருந்தமையின், |