| இவரால் புகழ் மாசுபடாது உய்த்த வேந்தருள் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் குறிப்பிடத்தக்கவராவர். சோழன் நலங்கிள்ளியின் புலவருள் ஒருவரான இளந்தத்தனார் உறையூர்க்கொருகால் சென்ற போது அவரை ஒற்று வந்தவரெனப் பிழைப்படக்கருதி, நெடுங்கிள்ளியின் புலவருள் ஒருவரான இளந்தத்தனார் உரையூர்க்கொருகால் சென்ற போது அவரை ஒற்று வந்தவரெனப் பிழைப்படக்கருதி, நெடுங்கிள்ளி கொல்லப்புக்கானாக, கோவூர்கிழார் அதனை யறிந்து விரைந்து சென்று புலவரை உய்வித்தார். அதனால் சோழன் குடிக்குண்டாகவிருந்த பெரும்பழியையும் நிகழாவாறு காத்தார். புலவர்கள் பரிசில்பெற்று வாழும் வாழ்வினராயினும் பிறர்க்குத் தீதுசெய்யும் இயல்பினரல்லர்; நண்ணார் நாண அண்ணாந்து செல்லும் ஆண்மையுடையார்; அவ்விடத்தும் எவ்விடத்தும் இனிது ஒழுகும் இனிபை் பண்பினர். மண்ணாளும் செல்வமெய்திய மன்னவ ரொப்பச் செம்மலும் உடையர் என ஆசிரியர ் கோவூர்கிழார் கூறுவது அந்நாளில் புலவர் பெருமக்களை இகழ்ந்தொழுகும் பேதைமாக்கட்குச் சீர்த்த அறிவுரையாகும். சோழன் நலங்கிள்ளிபால் தாம் பெற்ற வண்மைநலத்தைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக்கோவூர்கிழால் இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண், கிணைப்பொருநன் சென்று விடியற் காலையில் தன் இணைப் பறையைக் கொட்டி நலங்கிள்ளியின் புகழ் பாடினானாக. அதுகேட்டவன், அப் பொருநன்பால் அன்புகொண்டு, அவன் இடையில் அழுக்கேறிக் கிழிந்திருந்த உடையை நீக்கிப் புத்தாடை தந்து உடுப்பித்து உயர்ந்த கலன்கள் பல நல்கினான். பொருநனும் அதுகொண்டு சின்னாள் தங்கி மீள்பவன், யான் அவன்பால் இருக்கையில் அவனைக் கண்டு பயிலும்போது இதுவெனும் வரையறையின்றிப் பழகினேன்; அவன் தனக்குளதாகும் பகையைக் கடிதலேயன்றித் தன்னைச் சேர்ந்தோர்க் குளதாகும் பசிப்பகை கடிதலிலும் சிறந்தவன்; மறவர் மலிந்த போர்க்களத்தாலும் மறையவர்களின் வேள்விக்களத்தாலும் கடல்வழியே பிறநாடுகட்குச் சென்று பொருளீட்டி வரும் கலத்தாலும் புதுவாருவய் இடையறாது உறைதற்கு இனிதாயது அவனது நல்லவூர், என்று இதன்கண் குறித்துரைக்கின்றார். இப்பாட்டு இடையிடையே மிகவும் சிதைந்துளது. | மாகவிசும்பின் வெண்டிங்கள் மூவைந்தான் முறைமுறைக் கடனடுவட் கண்டன்ன வென் இயமிசையா மரபேத்திக் | 5. | கடைத்தோன்றிய கடைக்கங்குலாற் | | பலர்துஞ்சவுந் தான்றுஞ்சான் உலகுகாக்கு முயர்கொள்கைக் கேட்டோ னெந்தையென் றெண்கிணைக் குரலே கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது | 10. | தொன்றுபடு சிதா அர் மருங்கு நீக்கி | | மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசான் னகலஞ் .......................................லவான |
|