பக்கம் எண் :

470

     
 கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி
நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து
15.போதறியேன் பதிப்பழகவும்
 தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்ததன்.....
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்
20.திருங்கழி யிழிதரு மார்கலி வங்கம்
 தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத்
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர் நாடுகிழ வோனே.

     திணை: அத. துறை: இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்
கிழார் பாடியது.


     உரை: மாக விசும்பின் வெண்டிங்கள் - மாகமாகிய விசும்பின்கண்
நிலவும் வெண்மதியம்; மூவைந்தால் முறைமுற்ற - பதினைந்துநாள் முறையே
முதிர; கடல் நடுவண் கண்டன்ன - கடலின் நடுவின் அதனைக் கண்டாற்
போன்ற; என்இயம் இசையா மரபேத்தி - எனது இயமாகிய தடாரிப்பறையை
யறைந்து முறையே அவனுடைய புகழ் பரவினேனாக; கடைக்கங்குலால் -
இரவின் கடையாமமாகிய விடியற்காலத்தில்; பலர் துஞ்சவும் தான் துஞ்சான் -
பலர் உறங்கவும் தான் மட்டில் உறங்கானாய்;உலகு காக்கும் உயர் கொள்கை
- உலகத்தைக்  காக்கும்  உயர்ந்த  கொள்கையையுடைய; எந்தை - எம்
தலைவன்; கடைத் தோன்றிய என் தெண்கிணைக் குரல் கேட்டோன் - தன்
நெடுமனை முற்றத்தில் நின்று இசைத்த எனது தெளிந்த - கிணைப்பறையின்
ஓசையைக் கேட்டாய்; கேட்டற்கொண்டும் கேட்டதனால்;வேட்கை தண்டானது
- என்பால் உண்டான அருள் குறையாமல்;  தொன்றுபடு  சிதாஅர்  மருங்கு
நீக்கி - பழைமையுற்றுச் சிதர்ந்த  பீறிய  என  அரைிலிருந்த  உடையைக்
களைந்து போக்கி;கலிங்கம் அளித்திட்டு - புத்தாடை தந்து உடுப்பித்ததுடன்;
என் அரை நோக்கி - அதனை யணிந்து பொலியும் என் அரையைத் தான்
பார்த்து மகிழ்ந்து; மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் - மிகப்பெரிய
சிறப்பினையுடைய வீறமைந்த நல்ல கலன்களை;...நாரரி நறவின் நாண்மகிழ்
தூங்குந்து   -  நாரால்   வடிக்கப்பட்ட   கள்ளையுண்ட   நாடோறும்
மகிழ்ந்சிமிகும்;...   பதிப்பழகவும்     போதறியேன்    -     அவன்
ஊர்க்கண்ணேிருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்;
தன்பகை கடிதலன்றியும் - தன்னை