| வருத்தக் கருதும் பகையைப் போக்குதலோடு; சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் - தன்னைச் சேர்ந்தோருடைய பசியாகிய பகையை உடன்கெடுத்தற்கும் வல்லவனாவன்; மறவர் மலிந்த வேள்வித் தூணத்து - மறைகளைக் கேட்டுவல்ல அந்தணர் நிறைந்த வேள்விச்சாலையில் நிற்கும் தூண்களையும்; இருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் - கரிய கழிவழியாக வந்திறங்கும் கடலிற் செல்லுதலுடைய ஓடங்களை; தேறுநீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து - தெளிந்த நீர்பரந்த கடற்குச் செல்லும் வழியாகிய யாற்றைச் செம்மை செய்து செலுத்தி; துறைதொறும் பிணித்து நிறுத்தும் நல்ல வூர்களையும்; உறைவினர் யாணர் நாடுகிழவோன் - தங்கி வாழ்தற்கினிய புது வருவாயையுமுடைய நாட்டுக்கு உரியவன்; எ - று.
வெண்டிங்கள்: இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர். பதினைந்து நாளும் நிறைந்த திங்கள் கடல் நடுவே வட்டமாய்க் காணப் படுவது பற்றி முழுவட்டமாய்த் தோன்றும் தடாரிப்பறைக்கு உவமம் செய்தார். இயம் எனப் பொதுப்படக் கூறினாரேனும், திங்களை யுவமம் கூறுவதாலும், கிணைப்பொருநன் கூற்றாதலாலும், தடாரிப்பறை யென்றும் பெறப்பட்டது. மதியத் தன்னவென் விசியுறு தடாரி (புறம்:371) என்று பிறரும் கூறதல் காண்க. வேத்தியல் பொதுவியல் என இயலும் முறைமை யறிந்து இசையும் பாட்டும் கூத்தும் நிகழுமாதலின், இயம் இசையா என்றதனோடு, மரபேத்தி என்று கிணைப்பொருநன் உரைக்கின், பலர் துஞ்சவுந்தான் துஞ்சா னாதற்கு ஏது கூறுவார், உலகுகாக்கும் உயர்கொள்கை என்றார். பாணர்்பொருநர் புலவர் முதலாயினாரால் வேந்தருடைய மறமும் புகழும் நாடெங்கும் பரவிப் பகைவர்க்கு அச்சம் பயந்து அரணுமாதலின் அவர்க்குச் சிறப்புச் செய்தற்கண் விருப்பம் மிகவுடையனானான் என்பது வேட்கை தண்டாது என்பதனால் பெறப்படுகிறது. வறுமை மிக்கவழிப் பதியின்கண் பழகுதல் கூடாமையின், செல்வம் பெற்றுச் சிறக்கும் தனக்கு அஃது எளிதாய் இனிதாய்ப் போது கழிதற்கு வாயிலாயிற் றென்பான், போதறியேன் பதிப்பழகவும் என்றார். பிறரும், பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை (புறம்:393) யென்பது காண்க. தான் பகையால் நெருக்குண்டு வரு்தும் போதும் தன்மைனச் சேர்ந்தோர் பசியின்றி வாழ்தலிலே வேந்தன் கருத்து நிலவிற்றென்றற்கு, தன்பகை கடிதலன்றியும் சேர்ந்தோர், பசிப்பகை கடிதலும் வல்லன் என்றார். இது வன்மை பரிதுடையார்க்கே இயலுவதாகலின், வல்லன் என்றார்; யாற்றுப் பெருங்கால் கடலொடு கலக்குமிடம் மணம் தூர்ந்து வங்கம் கழியிடைப் புகுதற ் கியலாவழி, அதனைப் போக்கி வழிசெய்து கோடல் விளங்க, யாறு சீத்துய்த்து என்றார். கடைக் கங்குலில், இசையா, ஏத்தி, தோன்றிய, குரல்கேட்டோன்; கேட்டதற்கொண்டும், தண்டாது, நீக்கி, அளித்திட்டு, நோக்கி... அறியேன், வல்லன், கிழவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தூங்கும் பதியென |