பக்கம் எண் :

472

     

இயையும். தூணத்தையும். நல்லூரையும் யாணரையு முடைய நாடுகிழவோன்
என இகை்க.

     விளக்கம்: கடைக்  கங்குற்போதில்  யாவரும்  எழுதற்குமுன்  தான்
துயிலுணர்ந்து எழுந்து கிணைவன் வரவறிந்து வரவேற்று உடையும் உண்டியுந்
தந்து சிறப்பித்த சோழன்  நலங்கிள்ளியின்  நலத்தைப்  “பலர்  துஞ்சவுந்...”
“வீறுசா  னன்கலம்  நல்கினான்”  என்றார்.  ஆசிரியர்  கோவூர்கிழாரும்
கிணைவன் கூற்றில் வைத்துக் கூறுவது நோக்கத்தக்கது. மறக்கள வேள்வியும்
அறக்கள   வேள்வியும்    சோழன்   செய்துள்ளான்   என்பது,  “மறவர்
மலிந்ததன்... வேள்வித்தூணத்து”  என்பதனால்  விளங்குகிறது.  வங்கத்தை
“யாறுசீத்துய்த்துத் துறைதொறும் பிணிக்கும் நல்லூர்” என்றலின், இச்சோழனது
பேரூர்    கடற்கரைக்    கண்ணதாகிய   காவிரிப்பூம்பட்டினம்   என்பது
உய்த்துணரப்படுகிறது.   ஆகவே,   இவன்   கரிகாலனுக்குக்  காலத்தாற்
பிற்பட்டவன் என்பது தெளிவாம். கிடைத்தத பிரதியில் இரண்டொரு திருத்தம்
தவிர   இப் பாட்டின்   முழுவடிவும்    இனிது   காணச்   செல்வத்தைப்
பேணுக்காலத்துத்  தமிழம்   தன்  பண்டைய  இலக்கியச் செல்வத்தைப்
பேணுந்துறையில்  கருத்தைச்  செலுத்தியிருக்குமாயின், ஆ!   இத்தமிழகம்
இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால்
நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து
அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது
வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிறநாட்டார் தலைவணங்க
இருந்த தனது  பண்டைச்  சிறப்பை   எண்ணுகிறது;   இடையூறுகளையும்
இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம்
பண்டைய தமிழ்கூறும் நல்லுலகமாகும் பணியில் பெரும்பாடு படுகிறது. வாழ்க
தமிழ்; வீழ்க பகை. வெல்க தமிழகம், வெல்க தமிழர்.


புறநானூறு மூலமும்


ஆசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள்

விளக்கவுரையும்

முற்றுப்பெற்றன.