221

காமத்துப்பால் - Love

1. களவியல் - The Gandharva Marriage

109. தகையணங்குறுத்தல் - Mental Disturbance caused by the Beauty of the Princess
 

1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனம்குழை
மாதர்கொல் மாலும் என்நெஞ்சு.

  Goddess? or peafowl rare?
She whose ears rich jewels wear,
Is she a maid of human kind?
  All wildered is my mind!

1081
 
 

2. நோக்கினாள் நோக்கு எதிர்நோக்குதல் தாக்கு அணங்கு
தானைக் கொண்டு அன்னது உடைத்து.

  She of the beaming eyes,
To my rash look her glance replies,
As if the matchless goddess' hand
  Led forth and armed band.

1082
 
 

3. பண்டுஅறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையால் பேர் அமர்க்கட்டு.

  Death's form I formerly
Knew not; but now 'tis plain to me;
He comes in lovely maiden's guise,
  With soul-subduing eyes.

1083
 
 

4. கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

  In sweet simplicity,
A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life,
  Are with the form at strife!

1084
 
 

5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து.

  The light that on me gleams,
Is it death's dart? or eyes' bright beams?
Or fawn's shy glance? All three appear
   In form of maiden here.

1085
 
 

6. கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண்.

  If cruel eye-brow's bow.
Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart
  Her eyes no more would dart.

1086
 
 

7. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

  As veil O'er angry eyes
Of raging elephant that lies,
The silken cincture's folds invest
  This maiden's panting breast.

1087
 
 

8. ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.

  Ah! woe is me! my might,
That awed my foemen in the fight,
By lustre of that beaming brow
  Borne down,lies broken now!

1088
 
 

9. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.

  Like tender fawn's her eye;
Clothed is she with modesty;
What added beauty can be lent;
  By alien ornament?

1089
 
 

10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

  The palm-tree's fragrant wine,
To those who is taste yields joys divine;
But love hath rare felicity
  For those that only see!

1090