110. குறிப்பறிதல் - Recognition of the Signs (of Mutual Love) |
| 1. இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து. | A double witchery have glances of her liquid eye; One glance is glance that brings me pain; the other heals again.
| 1091 | |
| 2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. | The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight.
| 1092 | |
| 3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர். | She looked, and looking drooped her head; On springing shoot of love 'its water shed!
| 1093 | |
| 4. யான்நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். | I look on her; her eyes are on the ground the while; I look away; she looks on me with timid smile.
| 1094 | |
| 5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். | She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed.
| 1095 | |
| 6. உறாஅதவர் போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். | Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known.
| 1096 | |
| 7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர் போன்று உற்றார் குறிப்பு. | The slighting words that anger feign, while eyes their love reveal, Are signs of those that love, but would their love conceal.
| 1097 | |
| 8. அசைஇயற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். | I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of the soft smile!
| 1098 | |
| 9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. | The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyes.
| 1099 | |
| 10. கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. | When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless prove.
| 1100 | |
|
|