111. புணர்ச்சி மகிழ்தல் - Rejoicing in the Embrace |
| 1. கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. | All joys that senses five-sight, hearing, taste,smell ,touch-can give, In this resplendent armlets bearing damsel live!
| 1101 | |
| 2. பிணிக்கு மருந்து பிறமன் அணி இழை தன்நோய்க்குத் தானே மருந்து. | Disease and medicine antagonists we surley see; This maid, to pain she gives, herself is remedy.
| 1102 | |
| 3. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. | Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?
| 1103 | |
| 4. நீங்கின் தெறூஉம் குறுகும்கால் தண் என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். | Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wonderous fire obtain?
| 1104 | |
| 5. வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். | In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is found.
| 1105 | |
| 6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். | Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds again!
| 1106 | |
| 7. தம்இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் அம்மா அரிவை முயக்கு. | As when one eats from household store, with kindly grace Sharing his meal; such is this golden maid's embrace.
| 1107 | |
| 8. வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை போழப் படாஅ முயக்கு. | Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.
| 1108 | |
| 9. ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் கூடியார் பெற்ற பயன். | The jealous variance, the healing of the strife, reunion gained; These are the fruits from wedded love obtained.
| 1109 | |
| 10. அறிதோறு அறியாமை கண்டு அற்றால் காமம் செறிதோறு சேயிழை மாட்டு. | The more men learn the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels decked.
| 1110 | |
|
|