231

114. நாணுத் துறவுரைத்தல் - The Abandonment of Reserve
 

1. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.

To those whe'e proved love's joy and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.

1131
 
 

2. நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.

My body and my soul, that can no more endure,
Will lay reserve aside,and mount the 'horse of palm'

1132
 
 

3. நாணொடு நல்ஆண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'

1133
 
 

4. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்ஆண்மை என்னும் புனை.

Lover's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.

1134
 
 

5. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm' and pangs of eventide!

1135
 
 

6. மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்.

Of climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.

1136
 
 

7. கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.

There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the'horse of palm'

1137
 
 

8. நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்.

In virtue heart to move,yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil and court publicity!

1138
 
 

9. அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

'There's no one knows my heart, ' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

1139
 
 

10. யாம்கண்ணின் காணநகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie.

1140