233

115. அலர் அறிவுறுத்தல் - The Announcement of the Rumour
 

1. அலர்எழ ஆர்உயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.

By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!

1141
 
 

2. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் ஊர்.

The village hath to us this rumour giv'n that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower - like eyne.

1142
 
 

3. உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றுஅன்ன நீர்த்து.

The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.

1143
 
 

4. கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்என்னும் தன்மை இழந்து.

The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

1144
 
 

5. களித்தொறும் கள்உண்டல் வேட்டுஅற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me!

1145
 
 

6. கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்புகொண்டு அற்று.

I saw him but one single day; rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.

1146
 
 

7. ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

My anguish grows apace; the town's report
Manures it; my mother's word doth water it.

1147
 
 

8. நெய்யால் எரிநுதுப்பேம் என்று அற்றால், கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.

1148
 
 

9. அலர்நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?

1149
 
 

10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும் இவ்ஊர்.

If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!

1150