235
கற்பியல் - Wedded Love |
116. பிரிவாற்றாமை - Separation unendurable |
| 1. செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. | If you will say, 'I leave thee not, ' then tell me so; Of quick return tell those that can survive this woe.
| 1151 | |
| 2. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. | It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace.
| 1152 | |
| 3. அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவுஓர் இடத்து உண்மையான். | To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows, his promise and my breaking heart.
| 1153 | |
| 4. அளித்து அஞ்சல் என்றவர்நீப்பின், தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. | If he depart, who fondly said, 'Fear not.' what blame's incurred By those who trusted to his reassuring word?
| 1154 | |
| 5. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல், மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. | If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.
| 1155 | |
| 6. பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது அவர் நல்குவர் என்னும் நசை. | To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me.
| 1156 | |
| 7. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. | The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore.
| 1157 | |
| 8. இன்னாது இனன்இல் ஊர்வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. | 'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell.
| 1158 | |
| 9. தொடில் சுடின் அல்லது காமநோய் போல விடில்சுடல் ஆற்றுமோ தீ. | Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove.
| 1159 | |
| 10. அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். | Sorrow's sadness meek sustaining, Driving sore distress away, Separation uncomplaining Many bear the livelong day!
| 1160 | |
|
|