119. பசப்புறு பருவரல் - The Pallid Hue |
| 1. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற. | I willed my loved absent should remain; Of pining's sickly hue to whom shall I complain?
| 1181 | |
| 2. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு. | 'He gave' this sickly hue thus proudly speaks Then climbs, and all my frame its chariot makes.
| 1182 | |
| 3. சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. | Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he left.
| 1183 | |
| 4. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோபசப்பு. | I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray.
| 1184 | |
| 5. உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது. | My lover there went forth to roam; This pallor of my frame usurps his palce at home.
| 1185 | |
| 6. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு. | As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace.
| 1186 | |
| 7. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்அளவில் அள்ளிக் கொள்வற்றே பசப்பு. | I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it , came on me
| 1187 | |
| 8. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர் என்பார் இல். | On me, because I pine, they cast a slur; But no one says,'He first deserted her'
| 1188 | |
| 9. பசக்கமன் பட்டாங்கு என்மேனி நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின். | Well! Let my frame ,as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain.!
| 1189 | |
| 10. பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். | 'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain.
| 1190 | |
|
|