243

120. தனிப்படர் மிகுதி - The Solitary Anguish
 

1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழ்இல் கனி.

The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains.

1191
 
 

2. வாழ்வார்க்கு வானம் பயந்துஅற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

As heaven on living men showers blessing from above,
Is tender grace by lovers shown to those they love.

1192
 
 

3. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

Who love and are beloved, to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own'

1193
 
 

4. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

Those well-beloved will luckless prove.
Unless beloved by those they love.

1194
 
 

5. நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?

1195
 
 

6. ஒரு தலையான் இன்னாது காமம் காப்போல
இரு தலையானும் இனிது.

Love on one side is bad; like balanced load.
By porter borne, love on both sides is good.

1196
 
 

7. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்று ஒழுகுவான்.

While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?

1197
 
 

8. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life, -no braver souls than they!

1198
 
 

9. நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

Though he may heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.

1199
 
 

10. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅ அய் வாழிய நெஞ்சு.

Tell him thy pain that loves not thee?
Farewell, my soul' fill up the sea!

1200