123. பொழுதுகண்டு இரங்கல் - Lamentations at Eventide |
| 1. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. | Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour!
| 1221 | |
| 2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. | Thine eye is sad; Hail, Doubtful hour of eventide! Of cruel eye, as is my spouse , is too thy bride?
| 1222 | |
| 3. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். | With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space, and all my sorrow grows.
| 1223 | |
| 4. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். | When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends.
| 1224 | |
| 5. காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன் கொல்யான் மாலைக்குச் செய்த பகை. | O morn, how have I won thy grace? thou bring'st relief! O'eve, why art thou foe? thou dost renew my grief.
| 1225 | |
| 6. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். | The pangs that evening brings I never knew, Till he , my wedded spouse, from me withdrew.
| 1226 | |
| 7. காலை அரும்பிப் பகல் எல்லாம் போதுஆகி மாலை மலரும் இந்நோய். | My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour.
| 1227 | |
| 8. அழல் போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. | Then shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near.
| 1228 | |
| 9. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. | If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend.
| 1229 | |
| 10. பொருள் மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். | This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me.
| 1230 | |
|
|