124. உறுப்பு நலனழிதல் - Wasting Away |
| 1. சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். | Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see. Thinking on him, who wand'ring far, leaves us in misery.
| 1231 | |
| 2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். | The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears.
| 1232 | |
| 3. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். | These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day.
| 1233 | |
| 4. உறுப்பு நலனழிதல் பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். | When lover went, then faded all their wonted charms, And armlet's golden round slips off from these poor wasted arms.
| 1234 | |
| 5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். | These Wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one.
| 1235 | |
| 6. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. | I grieve. 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slid.
| 1236 | |
| 7. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து. | My heart! Say ought of glory wilt thou gain, If to that cruel one thou of thy wasted arms complain?
| 1237 | |
| 8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். | One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked.
| 1238 | |
| 9. முயக்கு இடைத் தண்வளிப் போழப் பசப்புஉற்ற பேதை பெருமழைக் கண். | As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with care.
| 1239 | |
| 10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒள்நுதல் செய்தது கண்டு. | The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright brow.
| 1240 | |
|
|