125. நெஞ்சொடு கிளத்தல் - Soliloquy |
| 1. நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்துஒன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable?
| 1241 | |
| 2. காதல் அவர் இலராக நீநோவது பேதமை வாழி என்நெஞ்சு. | Since he loves not, thy smart Is folly, fare thee well, my heart!
| 1242 | |
| 3. இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துஉள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். | What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woes.
| 1243 | |
| 4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. | O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away.
| 1244 | |
| 5. செற்றா எனக் கைவிடல் உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். | O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me?
| 1245 | |
| 6. கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain.
| 1246 | |
| 7. காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே யானோ பொறென் இவ்இரண்டு. | Or bid thy love, or bid thy shame depart; For me , I cannot bear them both, my worthy heart!
| 1247 | |
| 8. பரிந்தவர் நல்கார் என்று ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்வாய் பேதைஎன் நெஞ்சு | Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest; 'He will nor pity show nor love to me;
| 1248 | |
| 9. உள்ளத்தார் காதல் அவர்ஆக உள்ளிநீ யார்உழைச் சேறி என்நெஞ்சு. | My heart! My lover lives within my mind; Roaming, whom dost thou think to find?
| 1249 | |
| 10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேம்ஆ இன்னும் இழத்தும் கவின். | If I Should keep in mind the man who utterly renounces me, My soul must suffer further loss of dignity.
| 1250 | |
|
|