126. நிறையழிதல் - Reserve Overcome |
| 1. காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. | Of womanly reserve love's axe breaks through the door, Barred by the bolt of shame before.
| 1251 | |
| 2. காமம் என ஒன்றோ கண்இன்றுஎன் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். | What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in th midnight hour.
| 1252 | |
| 3. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றி விடும். | I would my love conceal, but like a sneeze It shows itself, and gives no warning sign.
| 1253 | |
| 4. நிறைஉடையேன் என்பேன்மன் யானோ என்காமம் மறைஇறந்து மன்றுபடும். | In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil.
| 1254 | |
| 5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதுஒன்று அன்று. | The dignity that seeks not him who acts as foe, Is the one thing that loving heart can never know.
| 1255 | |
| 6. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்று என்னை உற்றதுயர். | My grief how full of grace, I pray you see! It seeks to follow him that hateth me.
| 1256 | |
| 7. நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். | No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with love.
| 1257 | |
| 8. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. | The words of that deceiver, versed in every wily art, Are instruments that break through every guard of woman's heart!
| 1258 | |
| 9. புலப்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தில் உறுவது கண்டு. | 'I' ll shun his greeting'; saying thus with pride away I went; I held him in my arms, for straight I felt my heart relent.
| 1259 | |
| 10. நிணம் தீயில்இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்போம் எனல். | 'We' ll stand aloof and then embrace'; Is this for them to say, Whose hearts are as the fat that in the blaze dissolves away?
| 1260 | |
|
|