127. அவர்வயின் விதும்பல் - Mutual Desire |
| 1. வாள்அற்றப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல். | My eyes have lost their brightness, sight is dimmed, my fingers worn, With noting on the well the days since I was left forlorn.
| 1261 | |
| 2. இலங்குஇழாய் இன்று மறப்பின் என்தோள்மேல் கலம்கழியும் காரிகை நீத்து. | O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.
| 1262 | |
| 3. உரன்நசைஇ உள்ளம் துணைஆகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். | On victory intent, His mind sole company he went; And I yet life Sustain! And long to see his face again!
| 1263 | |
| 4. கூடியகாமம் பிரிந்தார் வரவுஉள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. | 'He comes again, who left my side, and I shall taste love's joy,;- My heart with rapture swells, when thoughts like these my mind employ.
| 1264 | |
| 5. காண்கமன் கொண்கனைக் கண்ஆரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. | O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies.
| 1265 | |
| 6. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. | O let my spouse but come again to me one day! I'll drink that nectar; wasting grief shall flee away.
| 1266 | |
| 7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். | Shall I draw back, or yield myself, or shall both mingled be, When he returns, my spouse dear as these eyes to me.
| 1267 | |
| 8. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலைஅயர்கம் விருந்து. | O would my king would fight, o'ercome, divide the spoil; At home, to-night the banquet spread should crown the toil.
| 1268 | |
| 9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு. | One day will seem like seven, to those who watch and yearn For that glad day when wanderers from afar return.
| 1269 | |
| 10. பெறின் என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துஉக்கக் கால். | What's my return, the meeting hour, the wished for greeting worth, If the heart-broken lie, with all her life poured forth?
| 1270 | |
|
|