129. புணர்ச்சிவிதும்பல் - Desire for Reunion |
| 1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு. | She answers the question-Why are you not angry with him who, unmindful of you, is preparing for departure: Gladness at the thought , rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight.
| 1281 | |
| 2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம் நிறைய வரின். | When as palmyra tall, fulness of perfect love we gain, Distrust can find no place small as the millet grain.
| 1282 | |
| 3. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண் | Although, his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see.
| 1283 | |
| 4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. | My friend, I went prepared to show a cool disdain; My heart, forgetting all, could not its love restrain.
| 1284 | |
| 5. எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. | The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband high.
| 1285 | |
| 6. காணும்கால் காணேன் தவறுஆய காணாக்கால் காணேன் தவறு அல்லவை | When him I see, to all his faults, I'm blind; But when I see him not , nothing but faults I find.
| 1286 | |
| 7. உய்த்தல் அறிந்து புனல்பாய்பவரே போல் பொய்த்தல் அறிந்து என்புலந்து. | As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem?
| 1287 | |
| 8. இளித்தக்க இன்னாசெயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. | Though shameful ill it works, dear is the palm - tree wine To drunkards; traitor, so to me that breast of thine!
| 1288 | |
| 9. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். | He muses: Love is tender as an opening flower. In season due To gain its perfect bliss is rapture known to few.
| 1289 | |
| 10. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. | Her eye, as I drew nigh one day, with anger shone; By love o'erpowered, her tenderness surpassed my own.
| 1290 | |
|
|