130. நெஞ்சொடு புலத்தல் - Ezpostulation with Oneself |
| 1. அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல்கண்டும் எவன் நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. | You see his heart is his alone; O heart, why not be all my own?
| 1291 | |
| 2. உறாஅதவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅர் எனச்சேறிஎன் நெஞ்சு. | 'Tis plain , my heart, that he's estranged from thee; Why go to him as though he were not enemy?
| 1292 | |
| 3. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். | 'The ruined have no friends, 'they say; and so my heart, To follow him, at thy desire, from me thou dost depart.
| 1293 | |
| 4. இனி அன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. | 'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee, my heart?
| 1294 | |
| 5. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்து என்நெஞ்சு. | I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain.
| 1295 | |
| 6. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்தது என்நெஞ்சு. | My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan.
| 1296 | |
| 7. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு. | Fall'n neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame.
| 1297 | |
| 8. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. | If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtue numbers o'er.
| 1298 | |
| 9. துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம்உடைய நெஞ்சம் துணை அல்வழி. | And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief?
| 1299 | |
| 10. தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய நெஞ்சம் தமர் அல்வழி. | A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own! | 1300 | |
|
|