269

133. ஊடலுவகை - The Pleasures of 'Temporary Variance'
 

1. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கும் மாறு.

Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealously to move.

1321
 
 

2. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்.

My 'anger feigned' Gives but a little pain;
And when affection droops; it makes it bloom again.

1322
 
 

3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந் தன்னார் அகத்து.

Is there a bliss in any world more utterly divine.
Than 'coyness' gives when hearts as earth ahd water join?

1323
 
 

4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

Within the 'anger feigned' 'that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.

1324
 
 

5. தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்குஒன்று உடைத்து.

II-He consoles himself, since reconciliation makes
  amends.
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.

1325
 
 

6. உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.

1326
 
 

7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

In lover's quarrels, 'Tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.

1327
 
 

8. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.

1328
 
 

9. ஊடுக மன்னோஒளி இழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

Let her, whose jewels brightly shine, aversion feign?
That I may still plead on, O night, prolong thy reign!

1329
 
 

10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்.

A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.

1330