10
 

வெறிகமழ் - மண நாறும்படியான, தண் - குளிர்ந்த, சுனை - சுனையின் கணுள்ள, தெள் நீர் -
தெளிந்த நீரானது, துளும்ப - அலையும்படி, வீழும் - விழும்படியான, வெறி கமழ் - நறு நாற்ற மிக்க, தண் - குளிர்ந்த, சோலை - சோலைகள் சூழ்ந்த, நாட - நாட்டிற்குரிய தலைமகனே ! அறிவின்கண் - (சிறந்தோனாகிய நினது) நல்லறிவினிடத்தே, நின்ற - (பிறர் எடுத்துக் கூறும்படி) தங்கியுள்ள, மடம் - அறியாமையாகிய, ஒன்று - ஒரு பொருள், உண்டோ - காணப்படுமோ? (காணப்படமாட்டாது. ஆகலின், அறிவாளியாகிய நினக்குத் தலைமகளை நீ விரைந்து மணம்புரிய வேண்டுமென்பதை விளக்க வேண்டுவதின்று, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(ப-ரை.) விரை கமழாநின்ற குளிர்ந்த சுனையின்கண் தெளிந்த நீர் துளும்ப மிளகு படர்ந்து வளராநின்ற இனியமாவினது நறுவிய கனிவீழும் வெறிகமழ் தண்சோலை நாடனே ! நின் அறிவின்கண் நின்றதொரு பேதமையுண்டோ?

(விரி.) தன்னேரில்லாத் தலைமகனாதலின், தோழி, “நாட ! ஒன்றுண்டோ வறிவின்கணின்ற மடம்,” எனக் குறிப்பாக வரைவு கடாயினள். சுனை - மலையின்கண்ணுள்ள நீர்நிலை. கறி - குறிஞ்சி நிலக் கருப்பொருள்.

(8)

மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளுங்
குன்றக நாடன் றெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி
யொன்றுமற் றொன்று மனைத்து.


[தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது.]


(பத.) மன்றத்து - பலர் கூடும் வெளியில், உறுகல் - பொருந்தியுள்ள கற்களில், கரும் கண் - கரிய கண்களையுடைய, முசு - முசு என்னும் ஒருவகைக் குரங்குகள், உகளும் - குதித்து