தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துறை, சொற்றொடர் விளக்கம்



ஐந்திணை யைம்பது

துறை, சொற்றொடர் விளக்கம்.

எண் - பக்கவெண்

வரைவு கடாதல் 
மணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல்.
வரைவு தலைவரல்
தலைமகனைச் சார்ந்தார் மணம் பேசி வரல்.
வரைவு மலிதல்
மணப் பேச்சினை மேற்கொண்டு வரல்.
தலைமகன் சிறைப்புறத்தானாக
பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக.
இயற்பழித்தல்
தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல்.
இயற்பட மொழிதல்
அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல்.
மெலிவில் நயம்
துன்பங் கலவாத இன்பம்.
புணர்ந்து நீங்கும்
பாங்கியிற் கூட்டத்தாற் றலைவியைக் கூடிப் பிரியும்.
பகற் குறி
தோழியினுதவியால் பகற்கண்ணே தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும்.
படைத்து மொழி கிளவி
புதிதாக வொன்றை அமைத்துக் கூறுஞ் சொற்றொடர.
மன்றத் துறுகல்
பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள்.
நிரைதொடி
கூடி நெருங்கிய வளையல்களை யணிந்த தலைமகள்.
வெறியாட்டெடுத்தல்
வேலற்குப் பூசையிடல்.
அறத்தொடு நிற்றல்
உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். 
செங்கதிர்ச் செல்வன்
சூரியன்
கொன்றைக் குழல்
கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்துச் செய்த குழல்.
செலவு
பொருள்வயிற் பிரிந்து செல்லுஞ் செலவு.
வரைவிடைப் பிரிவு
தலைமகளை மணத்தல் வேண்டி முலைவிலைக்காகப் பொருள் தேடுவான் தலைமகன்மேற் கொண்ட பிரிவு. 
உடன்போதல்
தலைவனுடன் பாலைநில வழியாகப் புறப்பட்டுப் போகுதல்.
செய் பெரு ஞ்சிறப்பு
பிறந்த புதல்வன் முகங் காண்டல், ஐம்படை பூட்டல், பெயரிடுதன் முதலியன.
உழலை மரம்
தொண்டுக்கட்டை ; அன்றி, தொழுவமரமெனலுமாம்.
தம்முறு விழுமம்
தாமுற்ற துன்பம்.
செவிலி மனப்போக்கு
காவலிற் கடுகுதல்.
முத்தன்மை
படைத்தல், காத்தல், அழித்தல்.
இடையீடு
தொடர்ச்சியற்ற நிலை.
அன்றில்
ஒருவகைப் புள் ; இஃது எக்காலும் இணைபிரியாது வாழு மியற்கையது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:01:57(இந்திய நேரம்)