11
 

விளையாடும், குன்று அக நாடன் - மலைகளைத் தன்னிடத்தே கொண்ட நாட்டுக்குரிய தலைமகன், தெளித்த - (இயற்கைப் புணர்ச்சிக் காலத்தே யான் தெளிவுறும்படி என்னை) தெளிவித்த, தெளிவினை - தெளிவாகிய தலைமகனுக்கும் எனக்கு மேற்பட்ட கூட்டப் பெருமையினை, நன்று என்று - (எதிர்கால வாழ்க்கையிற் பெரிய) நன்மையினைத் தரக்கூடிய ஒன்றென்று, தேறி - அறிந்து, தெளிந்தேன் - தீர்மானித்தேன், (அப்படித் தீர்மானித்த எனக்கு) தலை அளி - (அன்று அவன் காட்டியது) மிகுந்த அன்பாகிய, ஒன்று - ஒன்றாக வுளது, ஒன்றும் - அவ் வொன்றும், அனைத்து - எக்காலும் அத்தன்மையினின்றும் மாறாது என்னைக் காக்கும். (ஆகலின், நீ வீணே தலைமகனின் தன்மையினைப் பழித்துக் கூறவேண்டா எனத் தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) மன்றங்களிலே நெருங்கிய கல்லின்கண் கருங்கண் முசுக்கள்
குதிபாயுங் குன்றகநாடன் என் மனத்தைத் தெளிவித்த தெளிவினைப் பிழையாதென்று தேறினேற்கு அவன் செய்த தலையளி யொன்று ; அவ் வொன்றும் அப்பெற்றித்தாய்ப் பழுதாகாது.

(விரி.) மன்றத்துறுகல் - பலர்கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள் எனலுமாம். உறுகல் - மிகுந்த கற்கள் எனும் பொருளில் உரிச் சொற்றொடருமாம். மற்று - அசைநிலை.

(9)

பிரைசங் கொளவீழ்ந்த தீந்தே னிறாஅன்
மரையான் குழவி குளம்பிற் றுகைக்கும்
வரையக நாட ! வரையாய் வரினெந்
நிரைதொடி வாழ்த லிலள்.

[தோழி தலைமகனைக் கண்டு வரைவுகடாயது.]

(பத.) பிரைசம் - தேனினை, கொள - வேடுவர் கைக் கொண்டு செல்ல, வீழ்ந்த - வீழ்ந்து கிடக்கும்படியான, தீம்தேன்