இறால் - தித்திப்பான தேனிறால்களை, மரையான் - மான்களின், குழவி - கன்றுகள், குளம்பின் - தம் காற் குளம்புகளினாலே, துகைக்கும் - மிதித்து உழக்கும்படியான, வரை அக நாட - மலைகளைத் தன்னிடத்தே கொண்ட நாட்டிற்குரிய தலைமகனே! வரையாய் - (நீ தலைமகளை விரைந்து) மணந்து கொள்வாயாக, வரின் - (அங்ஙனம் வரையாது களவுப் புணர்ச்சியினையே விரும்பி) வந்து கொண்டிருப்பாயாயின், எம் நிரைதொடி - எங்கள் நிரை தொடியாகிய தலைமகள், வாழ்தல் இலள் - (வருத்த மிகுதியால்) உயிர்வாழ்தலின்றி மடிவள். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) தேறலைப் பிறர்கொள்ள வீழ்ந்த தீந்தேன் இறால்களை மரையான்கன்று குளம்பால் உழக்கும் வரையக நாடனே ! நீ வரையாது வருவாயாயின், எங்கள் நிரைதொடி உயிர்வாழாள். (விரி.) பிரைசம் = பிரசம் - தேன் ; அகர ஐகார இடைப்போலி. இறாஅல் - இசைநிறை யளபெடை. வரையாய் - ஏவலொருமை வினைமுற்று : அன்றி, எதிர்மறை முற்றெச்சமுமாம். நிரை தொடி - கூடி நெருங்கிய வளையல்களை யணிந்த தலைமகள் : வினைத்தொகையன்மொழி. (10) கேழ லுழுத கரிபுனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந் தாழருவி நாடன் றெளிகொடுத்தா னென்றோழி நேர்வளை நெஞ்சூன்று கோல்.
[தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் கேட்பத் தோழி தலைமகனை இயற்பழித்தது.]
(பத.) கேழல் - பன்றிகள், உழுத - கொம்பினாலே கிளறி விட்டுள்ளதும், கரி - (வேடுவர்களாலே சுட்டுக்) கரியப் பெற்றதுமான, புனக் கொல்லையுள் - தினைப்புனமாகிய நிலத்தினிடத்தே,
|