13
 

கடுவன் - ஆண் குரங்குகள், வாழை முதுகாய் - வாழையின் முதிர்ந்த காய்களை (ப் பழுப்பிக்கவேண்டி,) புதைத்து - புதைத்து வைத்து, அயரும் - (புதைத்த விடந் தெரியாமல்) வருத்தமுறும்படியாக, தாழ் அருவி - (அத்தினைப்புன வழியாகப் பெருக்கெடுத்துத்) தாழ்ந்து செல்லும்படியான நீர்வீழ்ச்சிகளையுடைய, நாடன் - நாட்டிற்குரிய தலைமகன், என் தோழி - என்னுடைய உயிர்ப்பாங்கியாகிய, நேர்வளை - நல்ல வளையலணிந்த தலைமகளின், நெஞ்சு - மார்பினிடத்தே, ஊன்று - தைத்த, கோல் - அம்பு போன்ற, தெளி - தெளிவாகிய உறுதி மொழிகளை, கொடுத்தான் - கொடுத்து விட்டான். (என்று தோழி கூறினாள்.)

(ப-ரை.) பன்றிகள் கொம்பினால் உழுத சுட்டுக்கரிந்த புனக்கொல்லையுள் வாழையின் முதிர்ந்தகாயைக் குரங்கினுட் கடுவன்கள் அப்புழுதியிற் புதைத்தயருந் தாழ்ந்த அருவிகளையுடைய நாடன் என்றொழியாகிய நேர்வளைக்கு அக்காலத்து நெஞ்சூன்று கோலாகத் தெள்ளிய வஞ்சினங் கூறினான்.

(விரி.) தலைமகன் வரைவு நீட்டித்தவழி அது பொறாத தோழி வருத்த மிகுதியாற் கூறியதாகு மிது. நேர்வளை - வினைத்தொகை யன்மொழி. “நேர்வளை நெஞ்சூன்று கோல்,” என்றமையான், இயற்பழித்ததாயிற்று.

(11)

பெருங்கை யிருங்களி றைவன மாந்திக்
கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ்
சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை
பொருந்தினார்க் கேமாப் புடைத்து.

[தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த
தோழிக்குத் தலைமகள் இயற்படமொழிந்தது.]



(பத.) பெரும் கை - பெரிய துதிக்கையினுடைய, இரும் - பெரிய, களிறு - ஆண் யானையானது, ஐவனம் - மலை நெற்பயிரை,