14
 

மாந்தி - தின்றுவிட்டு, கரும் கால் - கரிய அடிப்பாகத்தையுடைய, மராம் - மராமரங்கள் நிறைந்த, பொழில் - சோலையினிடத்தேயுள்ள, பாசு அடை - பசிய இலைகளாலுண்டாகிய நிழலினிடத்தே, துஞ்சும் - உறங்க இடமாயதும், சுரும்பு - வண்டினங்கள், இமிர் - ஒலிக்கின்ற, சோலை - பூங்காக்கள் நிறைந்துள்ளதுமாகிய, மலை - மலைகளாற் சூழப்பட்ட, நாடன் - நாட்டிற்குரிய தலைமகனின், கேண்மை - நட்பானது, பொருந்தினார்க்கு - அவனை நெருங்கி வாழ்வார்களுக்கு, ஏமாப்பு உடைத்து - பாதுகாவலாகப் பொருந்தும் பண்பினைக் கொண்டதாம். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) பெருங்கையையுடைய இருங்களிறு ஐவன நெல்லைத் தின்று, கருங்காலையுடைய மராம்பொழிலிற் பச்சிலைநிழலிற் றுயிலும் வண்டுகள் ஒலிக்கும் சோலைமலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்புடைத்து.

(விரி.) பொருந்தினார் - காதலிமார்கள். “களிறு துஞ்சும் மலை, சுரும்பிமிர் சோலைமலை,” எனக் கூட்டுக. “கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்பாகப் பொருந்துதலையுடைத்து,” என முடிக்க.

(12)

வார்குர லேனல் வளைவாய்க் கிளைகவரு
நீராற் றெளிதிகழ் காநாடன் கேண்மையே
யார்வத்தி னார முயங்கினேன் வேலனு
மீர வலித்தான் மறி.


[வெறியாட் டெடுத்துக் கொண்டவிடத்துத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.]

(பத.) (தோழியே) வார் - நீண்ட, குரல் - கதிரினையுடைய, ஏனல் - தினையினை, வளை - வளைந்த, வாய் - வாயினையுடைய, கி(ள்)ளை - கிளிகள், கவரும் - பற்றிக்கொண்டு செல்லும், நீரால் - தன்மையினாலே (என்னையன்மார் என்னைத் தினைப்புனக் காவலின்