16
 

[தலைமகன் வரும்வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள்
வரைவு வேட்டுத் தோழிக்குச் சொல்லியது.]

(பத.) தோழி - தோழியே ! குறை ஒன்று - நின்னால் முடிக்கப்பெற வேண்டிய காரிய மொன்று, உடையேன் - என்பாலுளது, (அது யாதென்றால்,) நிறை இல்லா - (மனக்கவற்சியால்) ஒருவழி நிற்றலைச் செய்யாத, மன் உயிர்க்கு - என்பாலுள்ள எனதுயிர்க்கு, ஏமம் - பாது காவலை, செயல் வேண்டும் - நீ செய்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதாம் (அஃதெங்ஙனமெனின்,) நீள் சோலை - நீண்டு வளர்ந்து மரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த, நாடனை - நாட்டிற்குரிய தலைமகனை, இன்னே - இப்பொழுதிருந்தே, அரா வழங்கு - பாம்புகள் நடமாடுகின்ற (சுற்றுப்புறத்தினையுடைய,) நம் இல் - (இரவுக் குறியாகிய) நம் வீட்டுப்புறத்தே, இராவாரல் - இராக்காலத்து வருதல் வேண்டா (வரைவினைக் கைக்கொண்டு பகற்போதே வருதல் வேண்டும்,) என்பது - என்ற செய்தியை, உரை - சொல்வாயாக என்பதாம். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) நின்னான் ஒரு காரியமுடையேன், தோழி ! நிலையில்லாத என் மன்னுயிர்க்கு அரணஞ் செய்யவேண்டும் ; இப்பொழுதே பாம்புகளான் வழங்கப்படுகின்ற நீண்ட சோலையையுடைய நாடனை நம்மனையின்கண் இரா வரவேண்டா என்பதனைச் சொல்.

(விரி.) மற்று - அசைநிலை. ஏ - பிரிநிலை. ஏதம் - துன்பம். வேட்டல் - விரும்பல். தலைவன் அராவழங்கு இற்புறம் வந்து செல்வது தலைவிக்குப் பெருந்துயர் விளைக்காநின்ற தென்பார், “நிறையில்லா மன்னுயிர்க்கேமஞ் செயல் வேண்டும்,” என்றார்.

(14)


குறிஞ்சி முற்றும்.