“தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் எய்தவுரைப்பதுதற்சிறப்பு,” என்றாங்கு இது செயப்படு பொருளைக்கொண்டிராமையின், இது பழைய போக்காகிய பாயிரமாகாமைகாண்க. அன்றியும், இவ்வாழ்த்து இந்நூலுக்குரியதெனக்கூறற்குச் சான்று ஒன்றும் இதன்கட் காணப்பட்டிலது.மேலும், இதற்குப் பழையவுரையுங் கிடைத்திலது. நூல். முதலாவது- குறிஞ்சி. அவரைபொருந்திய பைங்குர லேனல் கவரி மடமா கதூஉம்படர்சாரற் கானக நாட! மறவல் வயங்கிழைக் கியானிடைநின்ற புனை. [தோழிதலைமகனை வரைவுகடாயது.] (பத.)அவரை - அவரைக் கொடிகள், பொருந்திய - படர்ந்துநின்ற,பைங்குரல் - பசிய கதிர்களையுடைய, ஏனல் - தினைப்பயிர்களை, கவரி மடமா - இளமையான கவரி மான்கள்,கதூஉம் - பற்றி மேயும்படியான, படர் - பரந்த, சாரல்- மலைப் பக்கத்தையுடைய, கானக நாட - மலைநாட்டுத்தலைவனே! வயங்கு இழைக்கு - விளங்குகின்ற அணிகலங்களையணிந்த தலைவிக்கும் (உனக்கும்,) இடை - நடுவே, யான்- நான், நின்ற புணை - (தெய்வம் போன்று) புணையாகநின்று உங்கட்குக் கூட்டுறவு செய்வித்த நன்றியினை,மறவல் - மறவாது (தலைமகளை மணந்து என்னை) மகிழ்விப்பாயாக.(என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (பழையவுரை) அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தினையைக்கவரிமடமா கதுவாநின்ற படர்ந்த சாரலினையுடைய கானகநாடனே!மறவாது நினைப்பாயாக; வயங்கா நின்ற அணியினையுடையாட்குயான் நடுவுநின்ற புணையினை.
|