கதழுறை வானஞ் சிதற விதழகத்துத் தாதிணிர்க் கொன்றை யெரிவளர்ப்பப் பாஅ யிடிப்பது போலு மெழில்வான நோக்கித் துடிப்பது போலு முயிர்.
[இதுவு மது.]
(பத.) வானம் - முகில்கள், கதழ் - விரைவாக, உறை - மழைத்துளிகளை, சிதற - சிதறிப் பெய்ய, அகத்து - உள்ளிடத்தே, இதழ் - இதழ்களையும், தாது - பூந்தாதுகளையுமுடைய (மொட்டுக்கள் நிறைந்த,) இணர் - பூங்கொத்துக்களையுடைய, கொன்றை - கொன்றை மரங்கள், எரி வளர்ப்ப - நெருப்பினைப் போன்று மலர்ந்து காண, பாய் - பரந்து, இடிப்பது போலும் - இடித்துரைப்பது போல முழங்கும், எழில் - அழகினையுடைய, வானம் - வான் வெளியினை, நோக்கி - யான் பார்ப்பதால், உயிர் - எனதுயிரானது, துடிப்பது போலும் - வருந்தித் துயருறுவதுபோலாநின்றது. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) விரைந்து துளிகளை முகில்கள் இதழகத்தே சிதற, தாதினையுடைய பூங்கொத்துக்களையுடைய கொன்றைகள் எரிநிறத்தை மிகுப்ப, பரந்து கழறுவது போலும் எழில் விசும்பைக் காணுந்தோறும் வருந்தித் துடிப்பது போலாநின்றது என் உடலம். (விரி.) பாஅய் - இசைநிறை யளபெடை. நோக்கி - காரணப் பொருளில் வந்த வினையெச்சம். போலும் - முன்னது உவமவுருபு, பின்னது ஒப்பில் போலி. உயிர் தானியாகுபெயராய் உடலினையு முணர்த்தும். (18) ஆலி விருப்புற் றகவிப் புறவெல்லாம் பீலி பரப்பி மயிலாலச் - சூலி
|