21
 

விரிகுவது போலுமிக் காரதிர வாவி
யுருகுவது போலு மெனக்கு.

[இதுவு மது.]

(பத.) மயில் - மயிலினங்கள், ஆலி - மழைத்துளிகளை, விருப்புற்று - காதலுடனே, அகவி - கூவியழைத்துக் கொண்டு, புறவு எல்லாம் - முல்லை நிலமாகிய எல்லாப் பாகங்களிலும், பீலி - தோகைகளை, பரப்பி - விரித்து, ஆல - ஆடும்படி, சூலி - கருக்கொண்டு, விரிகுவது போலும் - (அக்கருவினை வெளிவிட) விரிந்து கொடுப்பது போல மின்னுகின்ற, இக்கார் - இந்த முகிலானது, அதிர - முழங்க, (அதனால்,) எனக்கு - எனது, ஆவி - உயிரானது, உருகுவது போலும் - உலையிலிட்டு உருகப் பெற்றது போல வருந்தாநிற்கும். (என்று தோழியிடந் தலைமகள் கூறினாள்.)

(ப-ரை.) மழைத்துளிகளைக் காதலித்தழைத்துக் காடெலாந் தோகைகளைப் பரப்பி மயிலினங்கள் ஆட, கருக்கொண்டு விரிகுவது போலும் இக்கார் முழங்க எனக்கு என் உயிர் உருகுவது போலாநின்றது.

(விரி.) எனக்கு - உருபு மயக்கம். போலும் - முன்னது பெயரெச்சம், பின்னது உவம உருபு.

(19)

இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப விடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.

[இதுவு மது.]

(பத.)இனத்த - கூட்டமான, அரும் - அரிய, கலை - ஆண் மான்கள், பொங்க - களித்துத் திரியவும், புனத்த - கொல்லைகளிலுள்ள,