25
 

(ப-ரை.) ஒசையையுடைய முகில்கள் பெயலைத் தொடங்கிக் கார்ப்பருவத்தைக் கொள்ள, நம் காதலர் தேரை போன்ற தழங்கு குரலையுடைய குதிரைத் தார்மணிகள் வாயதிர்ப்ப, இன்று நாம் ஆற்றியுளமாம் வகை வாராது விடுவார்கொல்லோ ? தோழி ! நம் வளை யாதும் நிற்கின்றது இல்லையால்.

(விரி.) கொல் - ஐயப்பொருள் கொண்டுளது. ஒன்றானாலும் எனற்பாலது ஒன்றாலும் எனலாயது. நில்லா - ஈறுகெட்ட எதிர்மறை யொன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.

(23)

கல்லேர் புறவிற் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - வெல்லி
யலைவற்று விட்டன்று வானமு முண்கண்
முலைவற்று விட்டன்று நீர்.



[இதுவு மது.]

(பத.) கல் - கற்கள், ஏர் - எழுந்து காணும்படியான, புறவில் - முல்லை நிலத்தின்கண்ணே, கவினி - அழகுடன் கூடி, புதல் மிசை - புதர்களிடத்தே, முல்லை - முல்லைச் செடிகள், தளவு ஒடு - செம்முல்லைச் செடிகளுடனே, போது அவிழ - மலரும்படியாக, வானமும் - முகிலும், எல்லி - இரவு முழுவதும், அலை அற்று - பின் வாங்கலின்றி, நீர் - மழைத்துளிகளை, விட்டன்று - பெய்தது, உண்கண் - மையுண்ட என் கண்ணும், (நீர்) - கண்ணீர்த்துளிகளை, முலை - முலைகளின்மீதே, வற்றுவிட்டன்று - வடித்துக் கொண்டிராநின்றது. (என்று தலைமகள் தோழியிடங் கூறி வருந்தினாள்.)

(ப-ரை.) கல்லெழுந்து கிடந்த கானத்தின்கண் அழகு பெற்றுப் புதல்கண்மிசை முல்லைகளும் செம்முல்லைகளும் பூக்கண்மலர, இரவின்கண் முகிலும் அலைவற்று விட்டன நீரினை ; மையுண் கண்களும் முலைகண்மிசை வடித்தன நீரினை.