26
 

(விரி.) ஏர் - ஏர்பு - எழுதல் : முதனிலைத் தொழிற்பெயர். அலைவு - வருந்தல் : சளைத்துப் பின்வாங்குதல். ‘நீர்’ என்பதனை யீரிடத்துங் கூட்டுக. பழையவுரையினிடத்தே பெரிய எழுத்துக்களிற் காண்பன ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் காணப் பெறாமற் போகப் பின்பு புதியனவாய்க் கருதிக் கொண்டனவாம். வற்றுவிடல் - வடிதல்.

(24)

(இருபத்தைந்து, இருபத்தாறாவது செய்யுட்கள் பழம் பிரதிகளில் காணப்பெறாவாய் மறைந்தன.)

கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லா
மார்ப்போ டினவண் டிமிர்ந்தாட - நீர்த்தின்றி
யொன்றா தலைக்குஞ் சிறுமாலை மாறுழந்து
நின்றாக நின்றது நீர்.


[இதுவு மது.]

(பத.) கார்ப்பு - மழையினை, உடை - உடைய, பாண்டில் - வாகைமரங்கள், கமழ - பூத்து மணக்கவும், புறவு எல்லாம் - முல்லை நிலங்களின் எல்லாப் பாகங்களிலும், இனம் வண்டு - வண்டுக் கூட்டங்கள், ஆர்ப்பு ஓடு - ஆரவாரிப்புடனே, இமிர்ந்து - ஒலித்துக் கொண்டு, ஆட - திரியவும், நீர்த்து இன்றி - பெருந்தன்மை முதலிய நற்குணங்களில்லாமல், ஒன்றாது - பகைத்து, அலைக்கும் - என்னை வருத்தும், சிறு மாலை - சிறு பொழுதாகிய மாலைக்காலம், மாறு - (எனக்கு) மாறாக, உழந்து - முயன்று, நின்று ஆக - நிற்க, (அதனாலே,) நீர் - கண்ணீரானது, நின்றது - கண்களில் நிலையாகத் தங்கலாயிற்று. (என் செய்வேன் ! என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(விரி.) இச்செய்யுண்முதல் பின்வருஞ் செய்யுட்கள் நாற்பத்திரண்டுக்கும் பழையவுரை கிடைக்கவில்லை. தலைமகள், மாலையானது தனிமைப்பட்ட பெண்பாலாகிய தன்னை வருத்துகின்றதென்பாள், “நீர்த்தின்றி யொன்றாது அலைக்குஞ் சிறுமாலை” எனலாயினள்.

(27)