27
 

குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப
வாயன் புகுதரும் போழ்தினானாயிழாய் !
பின்னொடு நின்று பெயரும் படுமழைகொ
லென்னொடு பட்ட வகை.

[இதுவு மது.]

(பத.) ஆய் இழாய் - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே ! ஆயன் - இடையன், குருந்தலை - மிகச் சிறந்த, வான் - பெரிய, படலை - பூமாலையினை, சூடி - அணிந்து, சுரும்பு - வண்டினங்கள், ஆர்ப்ப - (சூழ்ந்து) ஆரவாரிக்க, புகுதரும் - (ஆனிரையோடு மனைக்கண்ணே) சேருகின்ற, போழ்து இன் ஆன் - வேளையாகிய மாலைக்காலத்திலே, என் ஒடு - என் பால், பட்ட - தோன்றிய, வகை - (வருத்தமிக்க) இப்போக்கானது, பின் ஒடு - அவ்வாயன் பின்னாக, நின்று - (தோன்றி) நிலைபெற்று, பெயரும் - ஊர்ந்து வரும்படியான, படு மழை கொல் - பெய்யும் மழையினாலே தோன்றியதோ? (என்று தலைமகள் தோழியினிடம் வினவினள்.)

(விரி.) ஆயிழை - வினைத் தொகையன்மொழி. போழ்தினான், என்னோடு - வேற்றுமை மயக்கங்கள். படுமழை - வினைத்தொகை. கொல் - ஐயப்பொருள் தருமிடைச் சொல். “பெயரும்,” என்ற சொல் ஏட்டுப்பிரதியின் சிதைவாற் காணப்பெறாது போகப் புதிதாய்க் கருதிக்கொண்டதாகும்.

(28)


முல்லை முற்றும்.


மூன்றாவது - பாலை.



எழுத்துடைக் கன்னிரைக்க வாயில் விழுத்தொடை
யம்மா றலைக்குஞ் சுரநிரைத்தம்மா
பெருந்தகு தாளாண்மைக் கேற்க வரும்பொரு
ளாகுமவர் காத லவா.