28
 

[தலைமகன் செலவினைத் தலைமகட்குத் தோழி உணர்த்தியது.]

(பத.) பெரும் தகு - பெருமையினையும் தகுதியினையுமுடைய, தாளாண்மைக்கு - ஊக்கத்தினுக்கு, ஏற்க - பொருத்தமாக, அரும்பொருள் - அருமையான பொருளாக, ஆகும் அவர் - (விருப்பமிகுதியால்) மாறிடுந் தலைவரின், காதல் அவா - மிக்க விருப்பமானது, எழுத்து உடை - பெயர்கள் முதலிய குறிக்கப்பெற்ற, கல் - நடு கற்கள், நிரைக்க - வரிசையாக நடுவதற்கு, வாயில் - காரணமாகிய, விழு தொடை - சிறப்பாக அம்பு தொடுக்குந்தொடையாலே, அ மாறு - பழைமையாகிய தம் பகைவர்களை, அலைக்கும் - (மறவர்கள்) வருத்தற்கு இடமாகிய, சுரம் நிரைத்து - பாலை நிலவழியிலே ஒழுங்காகச் செல்லுதலையுடையது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(விரி.) செலவு - பொருள் வயிற் பிரிந்து செல்லுஞ் செலவு. காதல் அவா - ஒரு பொருட் பன்மொழி. விற்போர் முதலியவற்றில் வல்ல வீரர்கட்கு மட்டுமே அக்காலத்து கல்நட்டுச் சிறப்புச் செய்தல் மரபாகலான், “எழுத்துடைக்கன்னிரைக்க வாயில் விழுத்தொடை,” எனப்பட்டது. அம்மா - வியப்பிடைச் சொல். அ - பண்டறிசுட்டு.

(29)

வில்லுழு துண்பார் கடுகி யதரலைக்குங்
கல்சூழ் பதுக்கையா ரத்தத்திற் பாரார்கொன்
மெல்லியல் கண்ணோட்ட மின்றிப் பொருட்கிவர்ந்து
நில்லாத வுள்ளத் தவர்.


[தலைமகனின் செலவுடன்படாத தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.]


(பத.)மெல் இயல் - மெல்லிய தன்மையாகிய, கண்ணோட்டம் - இரக்கமாகிய பண்பு, இன்றி - இல்லாமல், பொருட்கு - பொருள் தேடுதற்கண், இவர்ந்து - விருப்புற்று, நில்லாத - நம்மிடத்திலே நிலை பெறாத, உள்ளத்தவர் - நெஞ்சினைக்கொண்ட தலைவர்,