(விரி.)கவரிமான் - ஒருவகை மான், வயங்கிழைக் கியான் -குற்றியலிகரம் அலகு பெறாமை காண்க. இச் செய்யுளினைஇளம் பூரணர் வரைவு நீட்டித்தவழி தோழி தலைவற்குக்கூறிய தென்பர், (தொல். பொருள். கள. 1.) நம்பியகப்பொருளில் இது பாங்கியிற்கூட்டத்தின் பின் பாங்கி தலைவியை நீங்கித்தலைவற்கு ஓம்படை சாற்றல் எனப்படும், (அகப். கள. 33.) வரைவுகடாதல் - மணம் புரிந்து கொள்ளும்படி தூண்டுதல்.கதூஉம் - சொல்லிசை யளபெடை. (1) கொல்லைப் புனத்தவகில்சுமந்து கல்பாய்ந்து வானி னருவி ததும்பக்கவினிய நாட னயமுடைய னென்பதனா னீப்பினும் வாடன்மறந்தன தோள். [வரைவுதலைவந்தமை கண்டு மகிழ்ந்த தலைமகள் தோழிக்குக்கூறியது.] (பத.) வானின் -மழையினாலே (பெருக்கெடுத்த,) அருவி - நீர் வீழ்ச்சியானது,கல் பாய்ந்து - மலைகளிலிருந்து இறங்கிச் சென்று, கொல்லை புனத்த -தோட்டமாகிய தினைப்புனத்தின்கண்ணேயுள்ள, அகில் சுமந்து -அகிற்கட்டைகளை மேற்கொண்டு, ததும்ப - எங்கும் நிரம்ப (அதனாலே,)கவினிய - அழகு மிகுந்த, நாடன் - மலை நாட்டிற்குரியதலைமகன், நயம் உடையன் - வாய்மை முதலிய நற்பண்புகள் வாய்ந்துள்ளான்,என்பதானால் - என்ற இதனாலே, நீப்பினும் - (அவன் பொருள்தேடல் காரணமாக என்னை இந் நெடுநாளாய்ப்) பிரிந்துசென்றிருந்தும், தோள் - என்தோள்கள், வாடல் - (வருத்தத்தால்)மெலிதலை, மறந்தன - மேற்கொள்ளாவாயின. (என்றுதலைவி தோழியினிடங் கூறினாள்.) (ப-ரை.)கொல்லைப்புனத்த அகிலைச் சுமந்து கற்களைப் பாய்ந்துமழையானுளதாய அருவி முழங்குதலான் அழகு பெற்ற நாடன்தன்னை யடைந்தார்க்கு ஈரமுடையன் என்பதனான்
|