போகும்படியான, அரும் சுரம் - அரிய பாலைநில வழியின் கொடுமையினை,நாம் உன்னி - நாம் நினைத்து வருந்துதலால், அறிவு இட்டு - (ஏதிலார் நம்களவினை) அறிந்து கூறும்படியான, அலர் மொழி - பழிச்சொற்கள், மலை அகம் - மலையினிடத்தே, நாட்ட - நாட்டப் பெற்ற, அ கொடி - அக்கொடிச்சீலையினைப் போன்று, சென்று - பரவி, வலன் உயர்ந்து - வலமாகச் சுழன்று எழுந்து, தோன்றும் - தோன்றாநிற்கும். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (விரி.) வரை விடைப் பிரிவு - தலைமகளை மணத்தல் வேண்டி முலைவிலைக்காகப் பொருள் தேடுவான் தலைமகன் மேற்கொண்ட பிரிவு. அலர் - பழிமொழிகள். (33) பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்தல்கிக் கூருகி ரெண்கி னிருங்கிளை கண்படுக்கு நீரி லருஞ்சுர முன்னி யறியார் கொ லீரமி னெஞ்சி னவர். [பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது.]
(பத.) ஈரம் இல் - நம்மீது இரக்கமென்பதைக் கொள்ளாத, நெஞ்சினவர் - மனத்தைக் கொண்டவராகிய நந்தலைவர், பீர் - பீர்க்கங் கொடிகள், இவர் - மேலேறிப் படர்ந்துள்ள, கூரை - மேற்பாகத்தினுடைய, மறு மனை - பாழ் வீடுகளில், கூர் உகிர் - கூர்மையான நகங்களையுடைய, எண்கு இன் - கரடியினது, இரும் கிளை - பெரிய கூட்டம், சேர்ந்து - கூடி, அல்கி - ஒருங்கி, கண்படுக்கும் - உறங்கும்படியான, நீர் இல் - வறண்ட, அரும் சுரம் - அரிய பாலை நிலத்தின் கொடுமையினை, உன்னி - நினைத்துப் பார்த்து, அறியார் கொல் - (தன் செலவு வேண்டா வொன்றென) தெரியமாட்டாரா ? (என்று தலைமகள் தோழியிடம் வினவினாள்.) (விரி.) மறு - குற்றம் : பாழ். கொல் - ஐயவினாப் பொருள்.
|