(பத.)காதலர் - நந்தலைவரின், உள்ளம் - மனமானது, படர்ந்த - (பொருள் தேடுதலை மேற்கொண்டு) சென்ற, நெறி - வழியானது, முள் உடை - முட்களையுடைய, மூங்கில் - மூங்கிற் புதர்கள், சூழ் - சூழ்ந்து, பிணங்கிய - பின்னிக்கொண்டு கிடக்கும்படியான, படப்பை - தோட்டத்தினிடத்தே, புள்ளி - புள்ளிகளையுடைய, வெருகு - காட்டுப்பூனையானது, தன் குட்டிக்கு - தனது குட்டிக்கு, இரை பார்க்கும் - உணவினைத் தேடித் திரிதலோடு, கள்ளர் - ஆறலைப்போர், வழங்கும் - சஞ்சரிக்கும், சுரம் என்பர் - கொடிய பாலைவனம் என்று சொல்லுவர் பலர். (என்று தலைமகள் தோழியிடங் கூறினள்.) (விரி.) காதலர் உள்ளம் படர்ந்த நெறியானது வெருகு தன் குட்டிக் கிரைபார்க்கும் கள்ளர் வழங்குஞ் சுரமாதலின், அவர் செல்லாது மீள்வர் என்பது தலைவி கருத்து. (36) பொரிபுற வோமைப் புகர்படு நீழல் வரிநுதல் யானை பிடியோ டுறங்கு மெரிமயங்கு கானஞ் செலவுரைப்ப நில்லா வரிமயங் குண்கண்ணு ணீர். [பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி உடன்படாது தலைமகட்குப் பின்னர் நேரும் இன்னலினை எடுத்தியம்பியது.]
(பத.) (எம்பெருமானே !) பொரி - பொரிந்த, புறம் - மேற் பாகத்தைக் கொண்ட, ஓமை - மாமரத்தினது, புகர் படு அழகு பொருந்திய, நீழல் - நிழலினிடத்தே, வரி - நீளமான, நுதல் - நெற்றியினையுடைய, யானை - களிறானது, பிடி ஒடு - பெண்யானையுடனே, உறங்கும் - தூங்குதற்கு இடமாயதும், எரி - காட்டுத் தீயானது, மயங்கும் - கலந்து காண்பதற்கு இடமாயதுமாகிய, கானம் - காட்டினிடத்தே, செலவு - (நீர் பொருள்வயிற் பிரிந்து)
|