செல்லுதலை, உரைப்ப - (தலைமகண்மாட்டு யான்) சொல்லுதலான்,வரி - கரிய ரேகைகள், மயங்கு - கலக்கப்பெற்று, உன் கண் உள் - மைதீட்டப்பெற்ற (தலைமகளின்) கண்களில், நீர் - கண்ணீரானது, நில்லா - தங்காது வடியா நிற்கும். (என்று தலைமகனிடத்தில் தோழி கூறினாள்.) (விரி.) இன்னல் - துயரம், நில்லா - ஈறுகெட்ட எதிர்மறை ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று. நீழல் - நீட்டல் விகாரம். (37) கோள்வல் கொடுவரி நல்வய மாக்குழுமுந் தாள்வீ பதுக்கைய கான மிறந்தார்கொ லாள்வினையி னாற்ற வகன்றவா நன்றுணரா மீளிகொண் மொய்ம்பி னவர். [பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது.] (பத.) கோள் வல் - (மான் முதலியவற்றைக்) கொள்ளுதலில் வல்ல, கொடு வரி - வளைந்த வரிகளையும், நல் - நல்ல, வயம் - வெற்றியினையுமுடைய, மா - விலங்காகிய புலிகள், குழுமும் - கூடித் திரியும், வீ - பூக்கள் நிறைந்த, தான் - அடிப்பாகத்தினையுடைய, பதுக்கைய - புதரினியுடைய, கானம் - காடாகிய பாலை நிலவழியின்கண்ணே, மீளி கொள் - வீரத்தினைக் கொண்ட, மொய்ம்பினவர் - வலிமை மிக்க காதலர், ஆள்வினையின் - முயற்சியினிடத்தே, ஆற்ற - மிகுதியுங் கொண்ட, அவா - விருப்பத்தினாலே, நன்று உணரா - (இங்குத் தங்குதலாலேற்படும்) நன்மையினை அறியாமல், அகன்று - (நம்மைப்) பிரிந்து, இறந்தார்கொல் - சென்றனரோ ? (எனத் தலைமகள் ஐயுற்றுத் தோழியை வினவினள்.) (விரி.) “கொடுவரிநல்,” - என்பது ஏட்டுப் பிரதியின் சிதைவாற் காணப்பெறாத புதிதாய்க் கருதிக் கொண்டதாகும். கொல்
|